வேகமெடுக்கும் கொரோனா பரவல்.. இனி பொது இடங்களில் மாஸ்க் கட்டாயம்.. புதிய கட்டுப்பாடுகளை விதித்த அரசு..
கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இனி பொது இடங்களில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று சண்டிகர் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேரளா உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கருத்திக் கொண்டு பல மாநிலங்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க தொடங்கி உள்ளன. அந்த வகையில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று சண்டிகர் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பொது இடங்களில் இனி அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதே போல் மருத்துவமனைகளில் பணிபுரியும் போது உதவியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவமனை ஊழியர்கள் முகக்கவசம் அணிவதையும் நிர்வாகம் கட்டாயமாக்கியுள்ளது. கூட்டம் அதிகம் கூடும் பகுதிகளை முடிந்தவரை தவிர்க்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் யாருக்கேனும், சளி அல்லது சிறிய வைரஸ் தொற்று இருந்தாலும் மருத்துவர்களை அணுகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏனெனில் இது நோய் பரவும் அபாயத்தைக் குறைக்கும் என்றும், பீதி அடையாமல் விழிப்புடன் இருக்கவும், அரசாங்கத்துடன் ஒத்துழைக்குமாறும் நிர்வாகம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
கர்நாடகாவில் முகக்கவசம் கட்டாயம்
முன்னதாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, கர்நாடக அரசு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தியது. மக்கள் பீதியடையத் தேவையில்லை. மாறாக, ஆபத்து மண்டலத்திலிருந்து விலகி இருக்க முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். மேலும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் பொது இடங்களில் கட்டாயமாக முகமூடி அணிய வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
கோவிட்-19 Vs பருவகால காய்ச்சல்: என்ன வித்தியாசம்.. எப்படி தற்காத்துக் கொள்வது?
இந்தியாவில் கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த சில நாட்கள் கொரோனா பரவல அதிகரித்து வருகிறது. அந்த வகையில் வெள்ளிக்கிழமை புதிதாக 640 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதே நேரத்தில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 2,997 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சக தரவுகள் தெரிவிக்கின்றன. நாட்டின் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை இப்போது 4.50 கோடியாக (4,50,07,212) உள்ளது. கேரளாவில் மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளதால், இறப்பு எண்ணிக்கை 5,33,328 ஆக உயர்ந்துள்ளளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,44,70,887 ஆக அதிகரித்துள்ளது. தேசிய மீட்பு விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது என்று சுகாதார அமைச்சகத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இறப்பு விகிதம் 1.19 சதவீதமாக உள்ளது என்றும் நாட்டில் இதுவரை 220.67 கோடி டோஸ் கோவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- chandigarh
- chandigarh covid-19 mask
- chandigarh mask fine
- chandigarh mask free
- chandigarh mask mandate
- chandigarh mask news
- chandigarh news
- corona curfew extended in chandigarh
- covid cases in chandigarh
- covid-19 mask fine challan in chandigarh
- mask chandigarh
- mask compulsory in chandigarh
- mask fine in chandigarh
- mask mandatory in chandigarh
- mask mandatory in delhi
- mask not mandatory
- masks
- masks mandatory
- masks not mandatory in india