மத்திய அமைச்சரவையிலிருந்து முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா... இதுதான் காரணமா?
மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த முக்தர் அப்பாஸ் நக்வி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய அமைச்சரவையிலிருந்து முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக முக்தர் அப்பாஸ் நக்வி செயல்பட்டு வந்தார். தற்போது குடியரசு தலைவர், துணை குடியரசு தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் முக்தா அப்பாஸ் நக்வி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியிருந்தது.
இதையும் படிங்க: நபிகள் நாயகத்தை அவமதித்த வழக்கு... நுபுர் சர்மாவுக்கு கொல்கத்தா காவல்துறை மீண்டும் சம்மன்!!
இந்த நிலையில் தான் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்த முக்தர் அப்பாஸ் நக்வி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். முன்னதாக முக்தர் அப்பாஸ் நக்வி மற்றும் ராம் சந்திர பிரசாத் சிங் இருவரின் ராஜ்யசபா பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது.
நக்வி சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சராக இருந்தபோது, சிங் அமைச்சரவையில் எஃகு அமைச்சராக இருந்தார். ஆதாரங்களின் படி, நாட்டின் வளர்ச்சிக்கு நக்வி மற்றும் சிங்கின் பங்களிப்புகளுக்காக பிரதமர் மோடி அவர்கள் இருவரையும் பாராட்டினார். பிரதமர் மோடியின் பாராட்டு, இரு அமைச்சர்களின் கடைசி அமைச்சரவைக் கூட்டம் என்பதற்கான அறிகுறியாகப் பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: காளி போஸ்டர்: மஹுவா மொய்த்ரா மீது வழக்குப் பதிவு
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு, நக்வி பாஜக தலைமையகத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜேபி நட்டாவைச் சந்தித்தார். இதனிடையே சில ஊடக அறிக்கைகளின் படி, பாஜக நக்வியை ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள துணை குடியரசு தலைவர் தேர்தலில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கலாம் அல்லது ஏதேனும் ஒரு மாநிலம் அல்லது யூனியன் பிரதேசங்களின் ஆளுநர் / லெப்டினன்ட் கவர்னர் பதவிக்கு அவரை பரிந்துரைக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் மத்திய அமைச்சரவையிலிருந்து முக்தர் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார். இதன் மூலம் பாஜகவில் 395 நாடாளுமன்ற உறுப்பினர்களில் முஸ்லீம் எம்.பி. என யாரும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.