பிரதமர் மோடி புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவையில் முழு நேர ராணுவ அமைச்சராக நியமிக்கப்பட்ட நிர்மலா சீதாராமன், பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

நிர்மலா பொறுப்பு ஏற்கும் போது, பாதுகாப்பு துறையை இதுவரை கவனித்து வந்தநிதி அமைச்சர் அருண்ஜெட்லி அவரிடம் பொறுப்புக்களை ஒப்படைத்தார்.

இந்த நிகழ்ச்சி நடக்கும் முன்,  புரோகிதர்கள் வேதங்கள் ஓதி, பிரார்த்தனைநடத்தனர், அதன்பின், நிர்மலா சீதா ராமன் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அப்போதுநிர்மலா சீதாராமனின் பெற்றோர்களும் உடன் வந்திருந்தனர்.

பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் கோவா முதல்வராகபொற்றுப்பு ஏற்ற பின், அந்த பொறுப்பை கூடுதலாக நிதி அமைச்சர் அருண் ஜெட்லிவகித்து வந்தார். சமீபத்தில் செய்யப்பட்ட அமைச்சரவை மாற்றத்தில் நிர்மலாசீதாராமனுக்கு முழுநேர பாதுகாப்பு அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு பின் பாதுகாப்பு துறையை வகிக்கும் 2-வது பெண் அமைச்சர் நிர்மலா சீதாராமன் என்பதும், நாட்டிலேயே முழுநேர பாதுகாப்பு அமைச்சராக பெண் ஒருவர் முதல்முறையாக இப்போதுதான் வகிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நிர்மலா சீதாராமன் பொறுப்பு ஏற்றுக்கொண்டபின், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

நாட்டின் மும்படைகளும் எப்போதும் தயாராக இருக்கும் வகையில் இருப்பதற்காக அதிகமான முன்னுரிமை கொடுப்பேன். ராணுவத்துறையினருக்கு மானியம், தேவையான உபகரணங்கள் அனைத்தும் அளிக்கப்பட்டு, அனைத்து வகையான கவனிப்பையும் பெறுவார்கள். 

நீண்டகாலமாக பாதுகாப்பு துறையில் கிடப்பில் இருக்கும் பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து பிரதமர் மோடியிடமும், மத்திய அமைச்சவையிலும் விவாதித்து முடிவு எடுக்கப்படும். பாதுகாப்பு துறையில் மேக் இன் இந்தியா திட்டத்ைத மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தும் வகையில் முயற்சிகள் எடுக்கப்படும்.

மிகவும் கடுமையான எல்லைப்பகுதியில் நமது வீரர்கள் கடமையாற்றுக் கொண்டு இருக்கிறார்கள், அவர்களின் நலனையும், அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதி செய்வோம். அவர்களின் நலன்கள் காக்கப்படும். வீரர்களுக்கு சிறந்த, நவீன ஆயுதங்கள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.