ஆன்லைன் பந்தயத்தை ஊக்குவிக்கும் விளம்பரங்களை தவிர்க்க வேண்டும்... ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!!
ஆன்லைன் பந்தயத்தை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் விளம்பர நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஆன்லைன் பந்தயத்தை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்களை ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் விளம்பர நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக இதுக்குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பந்தயம் தொடர்பான இணையதளங்களில் அதனை ஊக்குவிக்கும் விதமான விளம்பரங்களை ஆங்கிலம் மற்றும் ஹிந்தி நாளிதழ்கள் சமீப காலமாக வெளியிட்டு வருவதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும், நாளிதழ்கள், தொலைக்காட்சி சேனல்கள், இது சம்பந்தமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாஜகவில் இணைந்தார் காங். மூத்த தலைவரின் மகன் அனில் ஆண்டனி... அதிர்ச்சியில் காங்கிரஸ்!!
பந்தயம் தொடர்பான விளம்பரங்கள் மூலம் மக்கள் ஈர்க்கப்படுவது பதிப்புரிமைச் சட்டத்திற்கு 1957 புறம்பாக உள்ளது. மேலும் பிரஸ் கவுன்சிலின் பத்திரிகை நெறிமுறைகளை சுட்டிக் காட்டிய இந்த எச்சரிக்கை ஆலோசனைகள், நாளிதழ்கள் சட்டத்திற்கு புறம்பான அல்லது சட்டவிரோதமான விளம்பரங்களை வெளியிடக்கூடாது, நாளிதழ்களும், பருவ இதழ்களும் விளம்பரங்களை நெறிமுறைகளின்படியும், சட்ட நுணுக்கங்களின்படியும் தீவிரமாக கண்காணிப்பது பத்திரிகை பதிவுச்சட்டத்தின் கீழ், ஆசிரியரின் கடமையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மாம்பழ பிரியர்களுக்கு இனிப்பான செய்தி... தபால் மூலம் வீட்டு வாசலுக்கு வரும் மாம்பழம்
இந்த ஆலோசனைக்கு பிறகு பேசிய மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவுத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட டிஜிட்டல் குடிமக்களின் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தியதாக அரசாங்கம் கூறுகிறது. இது புதுமையையும் ஊக்குவிக்கும். ஆன்லைன் கேமிங்கில் புதுமைகளை ஊக்குவிப்பதன் மூலம் இந்தத் துறையை ஊக்குவிக்க அரசாங்கம் விரும்புகிறது, ஆனால் அதில் சூதாட்டம் மற்றும் பந்தயம் ஆகியவற்றை அனுமதிக்க முடியாது. புதிய விதிகள் கேமிங்கில் பந்தயம் மற்றும் சூதாட்டத்தை நிறுத்தும். இணையத்தை வெளிப்படைத்தன்மையுடனும் பாதுகாப்பானதாகவும், நம்பகமானதாகவும், பொறுப்புணர்வுடனும் உருவாக்குவதே இந்தத் திருத்தங்களின் நோக்கமாகும் என்று தெரிவித்துள்ளார்.