Asianet News TamilAsianet News Tamil

கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!!

கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

central govt wrote letter to all state govt regarding corona
Author
India, First Published Jun 28, 2022, 7:13 PM IST

கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் சமீபத்தில் வேகமாக குறைந்து வந்தது. 3 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்திருந்த கொரோனா பாதிப்புகள் தற்போது மீண்டும் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 11,793 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,27,97,092 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க: மீண்டும் கொரோனாவின் கோரப்பிடியில் இந்தியா.. கிடுகிடுவென உயரும் பாதிப்பு.. பீதியில் பொதுமக்கள்..!

central govt wrote letter to all state govt regarding corona

இதை அடுத்து கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது தலைதூக்கியுள்ள கொரோனா பரவல் காரணமாக ஒன்றிய அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் வலியுறுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் இன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், நாட்டில் வரும் மாதங்களில் பண்டிகை, திருவிழாக்கள், யாத்திரை நடைபெறவுள்ளது.

இதையும் படிங்க: 9 பேர் பயணித்த ONGC ஹெலிகாப்டர் விபத்து… 4 பேர் உயிரிழப்பு!!

central govt wrote letter to all state govt regarding corona

மக்கள் அதிகம் கூடும் இடங்கள், பெரிய திருவிழாக்களில் தடுப்பு விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். மருத்துவ கட்டமைப்பு வசதி, ஆக்சிஜன் இருப்பு, படுக்கை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அங்கு கொரோனா பரவல் அதிகரிக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாநில அரசுகளும் வரக்கூடிய நாட்களில் பரிசோதனை, கண்காணிப்பு, தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டியமைக்க கடைப்பிடிக்க வேண்டும். மேலும் கொரோனா வைரஸ் தொற்று விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவது, தடுப்பூசி செலுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios