ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. முன்னதாக ஆன்லைன் சூதாட்டங்களால் மக்கள் பலர் தங்களது பணத்தை இழந்துள்ளனர். இதனால் மனமுடைந்து தற்கொலை முடிவையும் எடுக்கின்றனர். இதை அடுத்து ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக ஆன்லைன் பந்தயங்கள், சூதாட்டம் சட்டவிரோதம் என நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: பிராமணர்கள் ரஷ்யாவை சேர்ந்தவர்கள், அவர்களை விரட்டியடிக்க வேண்டும்: ஆர்ஜேடி தலைவர் கருத்தால் சர்ச்சை..

இருந்தாலும் இணையதளங்கள் மற்றுமின்றி காட்சி, அச்சு ஊடகங்களிலும் ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்கள் வெளியாகிறது. இதை அடுத்து ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது. இதுக்குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சக செயலாளர் அபூர்வ சந்திரா, அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், டிஜிட்டல் செய்தி வெளியிட்டாளர்கள், ஓ.டி.டி. நிறுவனங்களும் விளம்பரம் வெளியிடக் கூடாது.

இதையும் படிங்க: 2 ஆண்டு சிறைக்கு எதிரான ராகுலின் மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு எப்போது? தேதியை சொன்ன குஜராத் உயர்நீதிமன்றம்

இளைஞர்கள், குழந்தைகள் மத்தியில் சமூக, நிதி பிரச்சனைகளை ஆன்லைன் சூதாட்டங்கள் ஏற்படுத்துகின்றன. பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க ஆன்லைன் சூதாட்ட விளம்பரங்களை ஒளிபரப்ப வேண்டாம். வெளிப்புற விளம்பரங்களான சுவரொட்டிகள், பேனர்கள், விளம்பரத் தட்டுகள் மூலம் சூதாட்ட விளம்பரங்கள் வெளியாவதை தடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.