பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid Corporation ) ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். இது இந்திய அரசாங்கத்தின் மின் அமைச்சகத்திற்கு சொந்தமானது. இந்தியாவின் குருகிராமில் தலைமையிடமாக கொண்டுள்ளது.

'பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா' இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மொத்த மின்சார பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இங்கு காலியாக உள்ள 105 பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டிருந்து காலியாக உள்ள Assistant Engineer Trainee பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 20.02.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) 

பணியின் பெயர்: Assistant Engineer Trainee 

மொத்த பணியிடங்கள்: 105

Computer Science – 37 பணியிடங்கள் 

Electrical – 60 பணியிடங்கள் 

Civil – 04 பணியிடங்கள் 

Electronics – 04 பணியிடங்கள்

தகுதி: விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் B.E/ B.Tech/ B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு ஆண்டு கால training- ல் ஊதியமாக ரூ.1,40,000/- வழங்கப்படும் என்றும் Training முடிந்த பின் மாத ஊதியமாக ரூ.1,60,000/- வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 31.12.2021ம் தேதியின் படி விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பில் தளர்வுகள் என்னென்ன என்று பார்க்கலாம். 

தேர்வு முறை : Assistant Engineer Trainee பணிக்கு தேர்வு செய்யப்படும். விண்ணப்பதாரர்கள் GATE 2021 Score, Behavioral Assessment, Group Discussion மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து 20.02.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 20.02.2022 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: SC/ ST/ PwD/ Ex-SM விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது, மற்றவர்கள்: ரூ. 500/-

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20.02.2022

மேலும் விவரங்களுக்கு : https://www.powergrid.in/recruitment-post-assistant-engineer-assistant-through-gate-2021