காரில் சீட் பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கும் அலாரத்தை நிறுத்தும் கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் க்ளிப்களை விற்பனை செய்யும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

காரில் சீட் பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கும் அலாரத்தை நிறுத்தும் கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் க்ளிப்களை விற்பனை செய்யும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஐந்து ஆன்லைன் ஷாப்பிங் தளங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019ஐ மீறுவதால், கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் க்ளிப்களை விற்பனை செய்யும் முதல் 5 இணைய வர்த்தக தளங்களுக்கு எதிராக மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க: கர்நாடகாவில் ஆட்சி அமைக்க எங்களிடம் ' Plan B' இருக்கு.. பாஜக அமைச்சர் சொன்ன தகவல்..

அமேசான், பிளிப்கார்ட்,ஸ்னாப்டீல், ஷாப்க்லூஸ், மீஷோ ஆகியவற்றிற்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. காரில் சீட் பெல்ட் அணியாவிட்டால் எச்சரிக்கும் அலாரத்தை நிறுத்தும் கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் க்ளிப்களை விற்பனை செய்யும் விவகாரம் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கடிதத்தின் மூலம் நுகர்வோர் விவகாரத் துறையின் ஆணையத்திற்கு தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க: இறந்தவர்களின் ஆன்மாவுடன் பேசுவதாக கூறி ரூ.2 கோடி மோசடி… கேரள சாமியரை அலேக்காக தூக்கிய போலீஸ்!!

விற்பனை செய்யும் ஆன்லைன் தளங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், ஆலோசனை வழங்கவும் கோரப்பட்டது. அதன்படி அனைத்து கார் சீட் பெல்ட் அலாரம் ஸ்டாப்பர் க்ளிப்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மோட்டார் வாகன உதிரிபாகங்களை நிரந்தரமாக நீக்குமாறு இணைய வர்த்தக தளங்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதுசார்ந்த சுமார் 13 ஆயிரத்து 118 பட்டியல்கள் வெவ்வேறு தளங்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.