புட்டபர்த்தி சாய்பாபா உள்ளிட்ட இறந்தவர்களின் ஆன்மாவுடன் தன்னால் பேச முடியும் என கூறி , கேரளாவைச் சேர்ந்த 52 வயது நபர், சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் 2 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

புட்டபர்த்தி சாய்பாபா உள்ளிட்ட இறந்தவர்களின் ஆன்மாவுடன் தன்னால் பேச முடியும் என கூறி , கேரளாவைச் சேர்ந்த 52 வயது நபர், சென்னையைச் சேர்ந்த ஒருவரிடம் 2 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எழும்பூர் ஆண்டர்சன் சாலையைச் சேர்ந்த கௌதம் சிவகாமி. இவருக்கும், கேரளாவை சேர்ந்த சுப்ரமணி என்பவருக்கும் நைஜீரியாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் போது, பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் நண்பர்களாகி, அவர்களது குடும்பத்தினருடன் நெருங்கி பழகி வந்தனர். கௌதம் ஒரு ஆன்மீக நபர் என்பதை அறிந்த சுப்ரமணி பல சடங்குகளை செய்தார்.

இதையும் படிங்க: தந்தையின் ஆசையை நிறைவேற்றிய மகன்… பாராட்டும் நெட்டிசன்கள்… இணையத்தில் வீடியோ வைரல்!!

அங்கு அவர் இறந்த ஆத்மாக்களுடன் பேசினார். ஒரு சந்தர்ப்பத்தில், அவர் இறந்து போன தனது தாயுடன் பேசுவதாக கௌதமை நம்ப வைத்தார். இன்னொரு சமயம், மறைந்த சாய்பாபாவிடம் பேச முடியும் என்றும் கூறியுள்ளார். பல ஆண்டுகளாக நடந்த சடங்குகளில், பூஜை அறையில் இருந்த தட்டுகள் பெயர்ந்து, எங்கிருந்தோ எலுமிச்சை பழம் தோன்றிய சம்பவங்கள் நடந்ததாக கூறப்படுகிறது. இதை அனைத்தையும் முதலில் நம்பிய கௌதம் பின்னர் அனைத்தும் பொய் என்பதை கண்டறிந்தார். முன்னதாக கௌதமின் இறந்து போன தாயாருடன் தான் பேசியதாகக் கூறப்படும் உரையாடல் அடங்கிய மின்னஞ்சல்களையும் கௌதமுக்கு சுப்ரமணி அனுப்பியதோடு கௌதமிடம் இருந்த ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி சுப்ரமணி பணம் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இனி இந்த செயலி மூலம் ரயிலின் நிகழ் நேரத்தை ஈசியா ட்ராக் செய்யலாம்.. எப்படி தெரியுமா?

மேலும் பல்வேறு சடங்களுக்கு கௌதமிடமிருந்து சுப்ரமணி பணம் வாங்கியுள்ளார். அவ்வாறு நான்கு வருட காலத்தில் பல சந்தர்ப்பங்களில் சுப்ரமணி 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளது கௌதமுக்கு தெரியவந்தது. இறுதியாக தான் ஏமாற்றப்படுவதை உணர்ந்த கௌதம் பொலீஸை அணுகினார். அதற்குள் சுப்ரமணி தப்பி ஓடிவிட்டார். தீவிர விசாரணைக்குப் பிறகு, சிசிபியின் ஒப்படைப்பு ஆவண மோசடி (இடிஎஃப்) பிரிவு அதிகாரிகள் திருவனந்தபுரத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்து சுப்ரமணியை கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.