விரைவில் இலவச சுகாதார உதவி எண் அறிமுகம்

கிராமங்களில் வசிக்கும் மக்கள் விரைவில் தாய், குழந்தைகளுக்கான சுகாதாரம், உடல் நலன் குறித்து விசாரணை மற்றும் புகார் தெரிவிக்க இலவச உதவி எண்ணை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு தாய், குழந்தைகள் நலம் காக்க, மத்திய அரசு தாய் மற்றும் குழந்தைகள் தொடர்பு வசதி மையத்தை தொடங்கியது. இதில் பணியாற்றும் அங்கீகாரம் பெற்ற சுகாதார ஆர்வலர்(ASHA) அல்லது ஆஷா செவிலியரை தொடர்பு கொண்டு சேவைகளை பெற்றுவந்தனர்.

இந்நிலையில் சுகாதாரத்துறை ஊழியர்களிடமும், கிராமத்தில் உள்ள கர்ப்பிணிகளிடமும் தொடர்பு ஏற்படுத்துவதற்காக புதிய இலவச தொலைபேசி சேவையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. 10588 என்ற அந்த இலவச உதவி எண்ணை சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகள் தொடர்பு கொண்டு ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். அடுத்த 90 விநாடிகளுக்குள், அவர்களுக்கு மறுமுனையில் இருந்து அழைப்பு வரும். இந்த அழைப்புகளைக் கவனிப்பதற் கென்றே 86 முகவர்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் அழைப்புகளை கையாள்வார்கள்.

இந்த சேவை மையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் குறிப்பிட்ட கர்ப்பிணி பெண்ணை முதலில் தொடர்பு கொண்டு, உள்ளூர் சுகாதார மையத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை கள், ஊட்டசத்து மருந்துகள், இரும்பு சத்து மாத்திரைகள் குறித்து தெரிந்து கொள்வர். பின் னர் அந்த கிராமத்தின் ஆஷா செவிலியர்களைத் தொடர்பு கொண் டும், அந்த கர்ப்பிணி பெண்ணுக்கு அளிக்கப்பட்ட மருத்துவ முறை கள் குறித்து கேட்டறிவர்.

 மேலும் போதிய அளவுக்கு தடுப்பூசிகள், ஊட்டசத்து மாத்திரைகள் கையிருப்பில் இருக்கிறதா என்றும், கிராமத்தின் ஆரம்ப சுகாதார மையத்தின் பிரசவ அறையில் போதுமான வசதிகள் உள்ளதா என கேட்டு அறியப்படும். அரசின் புதிய சுகாதாரத்திட்டங்கள் குறித்து தாய், குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்வதும் ஆஷா செவிலியர்களின் முக்கியக்கடமையாகும்

கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கப்பட்டு, ஏறக்குறைய 40 லட்சம் பயணாளிகளை தொடர்பு கொண்டு பேசப்பட்டுள்ளது. இந்த வசதி தற்போது 13 மாநிலங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தி, ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் மட்டும் பயனாளிகள் பேச முடியும். குஜராத்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 புதிய பிராந்திய மொழிகள் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.