Asianet News TamilAsianet News Tamil

வேகமாக பரவும் கொரோனா... பிப்.28 வரை கட்டுப்பாடுகளை நீட்டித்தது மத்திய அரசு!!

நாடெங்கும் கோரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை பிப்.28 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

central govt extended corona restrictions till feb 28
Author
India, First Published Jan 27, 2022, 8:42 PM IST

நாடெங்கும் கோரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளை பிப்.28 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவின் மூன்றாம் அலை வேகமாக பரவி வருகிறதி. மேலும் கொரோனா பாதிப்பு கடுமையாகி வருகிறது. இந்தியாவில் கடந்த 4 நாட்களாக தினசரி பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மீண்டும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,86,384 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. நேற்று 2,85,914 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் இன்று 2,86,384 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,00,85,116 லிருந்து 4,03,71,500 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஒரே நாளில் 3,06,357 பேர்  கொரோனா பாதிப்பில் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,73,70,971 லிருந்து 3.76,77,328 ஆக உயர்ந்துள்ளது நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 22,02,472 ஆக குறைந்துள்ளது.

central govt extended corona restrictions till feb 28

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் 573 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 4 லட்சத்து 91 ஆயிரத்து 700 ஆக உயர்ந்தது. இதன் காரணமாக கொரோனா கட்டுப்பாடுகளை பிப்.28 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுக்குறித்து இந்திய உள்துறைச் செயலர் அஜய் பல்லா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில், தற்போது நாடெங்கும் கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது.

central govt extended corona restrictions till feb 28

ஆயினும் கொரோனா, ஒமைக்ரான் பரவல் கட்டுக்குள் வந்தாலும் ஒரு சில இடங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக நாட்டில் உள்ள 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 407 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கவலை தரக்கூடிய வகையிலேயே உள்ளது. அங்கெல்லாம் கொரோனா பாசிட்டிவ் அளவு 10 சதவீதத்துக்கும் அதிகமாகவே உள்ளது. எனவே இதையொட்டி தளர்வுகளுடன் கூடிய கொரொனா கட்டுப்பாடுகள் வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  நாடெங்கும் இன்று கொரோனா பாதிப்பு  மீண்டும் அதிகரித்துள்ளதால் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பு நடவடிக்கைஅக்ளில் எவ்வித தொய்வும் இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios