Central govt employees will no longer get daily allowance on Leave Travel Concession
மத்திய அரசின் 49.26 லட்சம் ஊழியர்களுக்கு விடுமுறை கால பயண சலுகையின் கீழ் வழங்கப்படும் தினப்படியை திடீரென மத்திய அரசு செய்து அறிவித்துள்ளது.
எல்.டி.சி. எனப்படும் விடுமுறை கால பயணச் சலுகையில் மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் சொந்த ஊர் அல்லது மற்ற இதர இடங்களுக்கு பயணம் செய்து அதற்கு குரிய பயணச் செலவை திரும்பப் பெறலாம். ஊழியர்களின் தகுதிக்கு ஏற்ப இந்த சலுகை மாறிக்கொண்டே வரும்.
இந்நிலையில், மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை நேற்று முன்தினம் வெளியிட்ட திடீர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
எல்.டி.சி.யின் கீழ் எதிர்பாராத செலவுகள், உள்ளூர் பயணச் செலவுகளுக்கு இதில் டிக்கெட்கட்டணத்தை திரும்பப் பெற முடியாது
அதேசமயம், பிரிமியம் அல்லது சுவிதா ரெயில்களில் பயணிப்பது, தட்கல் முறையில் பயணிப்பது ஆகியவற்றுக்கு அரசு ஊழியர்களுக்கு வழக்கம் போல் எல்.டி.சி.யின் கீழ் பயணச் செலவு திருப்பித் தரப்படும். அதாவது, ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரெயில்களில் பிளக்சி பேர் கட்டணத்தில் பயணிக்க அனுமதி உண்டு. அதேசமயம், விமானத்தில் பயணித்துவிட்டு கட்டணத்தை திரும்பப் பெற எல்.டி.சி.யில் அனுமதி இல்லை.
மேலும், அரசுக்கு சொந்தமான வாகனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் வாகனங்கள், மாநில அரசுகளின் வாகனங்கள், உள்ளாட்சி நிர்வாகங்களின் வாகனங்களில் பயணித்து அதன் மூலமே எல்.டி.சி.யின் கீழ் செலவுத்தொகையை திரும்பப் பெற முடியும.்
அதேசமயம், அரசு வாகனங்கள் செல்ல முடியாத இடத்துக்கு செல்லும்போது, அரசு ஊழியர்ஒருவரு தனியார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம். அதற்குரிய செலவு கட்டணத்தை, சுயகையொப்பம் இட்டு எல்.டி.சி மூலம் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அதுவும் 100 கி.மீ அளவுக்கு மட்டுமே பொருந்தும்.
இந்த புதிய உத்தரவு ஜூலை 1-ந்தேதி முதல் முன்தேதியிட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
