மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. விரைவில் சம்பள உயர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிடலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.
கொரோனா காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA உயர்த்தப்பட்ட நிலையில் அனைத்து ஊழியர்களின் சம்பளமும் உயர்ந்தது. இதுமட்டும் அல்லாமல் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் குழந்தைகளுக்கான கல்வி கொடுப்பனவிலும் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது.
தற்போது மத்திய அரசு ஊழியர்கள் அமைப்புகள் கடந்த சில மாதங்களாக அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை நிர்ணயம் செய்யும் fitment factor அளவை 2.57 இல் இருந்து 3.68 ஆக உயர்த்த மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது. fitment factor உயர்த்தப்பட்டால் அரசு ஊழியர்களின் சம்பளம் மொத்தமாக உயரும்.

அரசு ஊழியர்களின் கோரிக்கைப்படி fitment factor உயர்த்தப்பட்டால் அடிப்படை சம்பளம் 18000 ரூபாயில் இருந்து 26000 ரூபாயாக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது. அடிப்படை சம்பளம் உயர்த்தால் மொத்த சம்பளமும் கணிசமாக உயரும்.

இதுகுறித்து அரசு ஊழியர் சங்கங்களிடம் மத்திய அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான DA அளவீட்டை ஜனவரி 2021, ஜூலை 2021 என இரண்டு முறை அதிகரித்து 31 சதவீதமாக உயர்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
