மாநில அரசுக்கான வரிப்பகிர்வு! உ.பி.க்கு அள்ளிக்கொடுத்து தமிழகத்துக்கு கிள்ளிக்கொடுத்த மத்திய அரசு!
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வரி வருவாயில் இருந்து வரிப்பகிர்வு வழங்கியுள்ளது. இந்த மாதம் ரூ.1.73 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் வரிப்பகிர்வு என்பது மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாநில அரசுகளின் மூலதன செலவினங்களை விரைவுப்படுத்துவதற்கும் அவர்களின் வளர்ச்சி மற்றும் நலன் சார்ந்த செலவினங்களுக்கு நிதியளிப்பதற்கும் இந்த மாதம் அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது கடந்த டிசம்பரில் ரூ.8.,086 கோடி விடுவிக்கப்பட்ட நிலையில் இந்த மாதம் ரூ.1.73,030 கோடியாக உயர்த்தி விடுவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்! திமுக போட்டி! வேட்பாளர் யார்?
இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: ஆந்திர பிரதேசத்துக்கு ரூ. 7,002.52 கோடியும், அருணாச்சல பிரதேசம் ரூ. 3,040.14 கோடியும், அசாம் ரூ. 5412.38 கோடியும், பீகார் ரூ.17,403.36 கோடியும், சத்தீஸ்கர் ரூ.5,895.13 கோடியும், கோவா ரூ. 667.91 கோடியும், குஜராத் ரூ.6017.99 கோடியும், அரியானா ரூ.1891.22 கோடியும், இமாச்சல பிரதேசம் ரூ.1436.16 கோடியும், ஜார்க்கண்ட் ரூ.5722.10 கோடியும், கர்நாடகா ரூ.6310.40 கோடி.
மேலும் கேரளா ரூ.3330.83 கோடியும், மத்திய பிரதேசத்தில் ரூ.13,582.86 கோடியும், மகாராஷ்டிரா ரூ. 10,930.31 கோடியும், மணிப்பூர் ரூ.1238.90 கோடியும், மேகாலயா ரூ.1327.13 கோடியும், மிசோரம் ரூ.865.15 கோடியும், நாகாலாந்து ரூ. 984.54 கோடியும், ஒடிசா ரூ. 7834.80 கோடியும், பஞ்சாப் ரூ.3126.65 கோடியும், ராஜஸ்தான் ரூ.10,426.73 கோடியும், சிக்கிம் ரூ.671.35 கோடியும், தமிழகம் ரூ.7057.89 கோடியும், தெலங்கானா ரூ. 3637.09 கோடியும், திரிபுரா ரூ. 1225.04 கோடியும், உத்தர பிரதேசம் ரூ.31,039.84 கோடியும், உத்தரகண்ட் ரூ.1934.47 கோடியும், மேற்கு வங்கம் ரூ.13017.06 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: நாம் தமிழர் கட்சியை மாநிலக் கட்சியாக அறிவித்த கையோடு சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த தேர்தல் ஆணையம்!
உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டுக்கு குறைவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதாவது பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுகீட்டை அள்ளிக் கொடுத்து வழக்கம் போல தமிழகத்திற்கு மத்திய அரசு கிள்ளிக்கொடுத்துள்ளது.