Asianet News TamilAsianet News Tamil

ஆதார் மற்றும் பயோமெட்ரிக்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடுக்குபிடி - ஏன்னா வந்த புகார்கள் அப்படி!

மத்திய அரசு ஊழியர்களுக்கு.. வருகைப்பதிவேட்டில் இனி குளறுபடி பண்ணவே முடியாது. மீறினால் நிச்சயம் அந்த தண்டனை உண்டாம்!

Central government staffs attendance issue governments new strict order
Author
First Published Jun 27, 2023, 11:13 AM IST

அரசு ஊழியர்கள் வேலைக்கு தாமதமாக வருவது, அல்லது அலுவலகத்திற்கு வருகை தராமலேயே வருகை பதிவேட்டில் கையெழுத்திட வைப்பது மற்றும் வேலை நேரம் முடியும் முன்பே அலுவலகத்தை விட்டு வெளியில் கிளம்பி செல்வது என்று மெத்தனப் போக்கை கையாண்டு வருகிறார்கள் என்ற ஒரு மாபெரும் குற்றச்சாட்டு பரவலாகவே இருந்து வருகிறது. 

இந்நிலையில் மத்திய அரசு அலுவலகங்களில், ஊழியர்களுடைய வருகை பதிவேட்டில் பல்வேறு வகைகளில் தொடர்ச்சியாக குளறுபடிகள் ஏற்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. அதே போல மத்திய அரசு சார்ந்த துறைகளில் ABEAS என்ற வருகைப்பதிவேடு திட்டம் அமலில் இருந்தும், அவை சரிவர பூர்த்தி செய்யப்படுவதில்லை என்ற புகாரும் தொடர்ச்சியாக எழுந்து வருகின்றது.

ABEAS என்றால் என்ன?

இதை Aadhaar Enabled Biometric Attendance System என்றழைப்பர், மத்திய அரசு ஊழியர்களின் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு வருகைப்பதிவு முறை. ஆனால் இந்த முறையை யாரும் சரிவர பயன்படுத்தாமல் மெத்தனப்போக்கை கையாள்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் அந்த பிரச்னையை தவிர்க்கவும், அனைத்து ஊழியர்களும் சரிவர தங்கள் வேலை நேரத்தை பயன்படுத்தும்பொருட்டும் புதிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. 

இதையும் படியுங்கள் : நடு வானில் ஏர் இந்தியா விமானம்.. இருக்கை அருகே சிறுநீர் கழித்தவர் சிக்கினார்!

இனி ABEAS மூலம் தங்கள் வருகை பதிவை சரிவர செய்யாத ஊழியர்கள் மீது கடுமையான துறை சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த துறை சார்ந்த HODகள், (துறைத்தலைவர்) அடிக்கடி ஊழியர்களின் ABEAS தரவுகளை சரிபார்க்க உத்தரவிட்டுள்ளனர். 

இதை மீறி தொடர்ச்சியாக வருகைப்பதிவேட்டில் குளறுபடி செய்யும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, அவர்களின் பணி காலம் முடிந்து ஓய்வு காலத்தில் அவர்களுக்கு அரசு வழங்கும் பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் நிறுத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது

Follow Us:
Download App:
  • android
  • ios