ஓடிடி தளங்களில் பாகிஸ்தான் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை நிலைநாட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்

பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா, பாகிஸ்தான் மீது பதிலடி தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் 9 இடங்களை குறிவைத்து தாக்கியது. பயங்கரவாதிகளின் முகாம் அலுவலகம், தலைமை அலுவலகம், பயிற்சி அலுவலகம் தகர்க்கப்பட்டது. இதில் 50க்கும் மேற்பட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனையடுத்து இரு தரப்பிற்கும் இடையே எல்லையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் ஓடிடி தளங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் படி, பாகிஸ்தான் படங்கள், வெப் சீரிஸ்களை நீக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

ஓடிடி தளங்களுக்கு கட்டுப்பாடு

தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (MIB) வெளியிட்டுள்ள இந்த உத்தரவில், தேசிய பாதுகாப்புகள் மற்றும் இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டை நிலைநிறுத்த வேண்டியதன் அவசியத்தைக் வலியுறுத்தியுள்ளது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் விதிகள், 2021 இன் பகுதி-III இன் கீழ் க நாட்டின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் தொடர்பாக, ஆன்லைன் தளங்களுக்கு நெறிமுறைக் குறியீட்டை செயல்படுத்த அரசாங்கத்திற்கு அதிகாரம் அளிக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான் படங்கள், பாடல்களை நீக்குங்க

இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதிக்கும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல், நட்பு வெளிநாடுகளுடனான இந்தியாவின் உறவுகளுக்கு சேதம் விளைவிக்கும் அல்லது வன்முறையைத் தூண்டும் அல்லது பொது ஒழுங்கை சீர்குலைக்கும். இந்த விதிமுறைகளுக்கு இணங்க, அனைத்து ஓடிடி தளங்கள் மற்றும் மீடியா ஸ்ட்ரீமிங் சேவைகளும் "வலைத் தொடர்கள், திரைப்படங்கள், பாடல்கள், மற்றும் பிற ஸ்ட்ரீமிங் மீடியா உள்ளடக்கம், சந்தா அடிப்படையிலான கிடைக்கப்பெற்றாலும் அல்லது இல்லாவிட்டாலும், பாகிஸ்தானில் உருவாக்கியதை உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று அறிவுரை குறிப்பிடுகிறது.

கட்டுப்பாடுகள் விதித்த மத்திய அரசு

தகவல் தொழில்நுட்ப விதிகளின் விதி 3(1)(b) தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாகப் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதிப்படுத்த நியாயமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அமைச்சகம் நினைவூட்டியுள்ளது.. இந்த அறிவுரை குறிப்பிட்ட தளங்கள் அல்லது உள்ளடக்கத் தலைப்புகளைக் குறிப்பிடவில்லை என்றாலும், இது இந்திய அதிகார வரம்பிற்குள் செயல்படும் அனைத்து இந்திய மற்றும் சர்வதேச ஸ்ட்ரீமிங் சேவைகளுக்கும் பொருந்தும் என கூறப்படுகிறது. Netflix, Amazon Prime Video மற்றும் YouTube போன்ற தளங்கள் உடனடியாக மத்திய அரசின் கட்டுப்பாடுகளை செயல்படுத்தும் என தகவல் வெளியாகியுள்ளது.