2018ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின் சமையல் கியாஸ் மானியம் ரத்து செய்யப்படாது, ஒழுங்குமுறைப்படுத்தப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மக்களவையில் தெரிவித்தார்.

ஆனால், நேற்று முன்தினமோ, 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் சமையல் கியாஸ்மானியம், ரத்து செய்யப்படும், இதற்காக மாதம் தோறும் ரூ.4 உயர்த்திக் கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதித்துள்ளதாக நேற்று முன் தினம் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

2016ம் ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து  சமையல் கியாஸ் சிலிண்டருக்கான விலையை மாதம் தோறும் 2 ரூபாய் உயர்த்திக் கொள்ள அரசு எண்ணைய்நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது. ஜி.எஸ்.டி. அமலுக்கு வந்தபோது, சிலிண்டருக்கு விதிக்கப்பட்ட 5 சதவீதம் வரியைச் சேர்த்து ரூ. 32 உயர்த்தப்பட்டது. இதனால் , சென்னையில் சமையல் சிலிண்டர் விலை தற்போது ரூ.576க்கு  உயர்ந்தது.

இந்நிலையில்,  மக்களவையில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் நேற்று முன்தினம் அளித்த பதிலில் -

மானிய விலையில் வழங்கப்படும் 14.2 கிலோ எடை கொண்ட சமையல் சிலிண்டர் விலை மாதந்தோறும் ரூ. 4ஆக உயர்த்திக்கொண்டு, மானியத்தை 2018ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஒட்டுமொத்தமாக நிறுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதில் மானியம் எப்போது முடிவுக்கு வருகிறதோ அல்லது மார்ச் 2018 வரை இந்த நடைமுறை பின்பற்றப்படும். இதற்கான உத்தரவு கடந்த மே மாதம் பிறப்பிக்கட்டு, ஜூன் 1-ந்தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது எனத் தெரிவித்தார்.

இந்த அறிவிப்புக்கு நாடுமுழுவதும் எதிர்ப்புக் கிளம்பி வருகிறது. இது தொடர்பாக மாநிலங்கள் அவையில் காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிகள் நேற்று பெரும் ரகளையில் ஈடுபட்டனர்.

அப்போது எழுந்து பேசிய மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், “ சமையல் கியாஸ் மானியம்  ரத்து செய்யப்படாது, மானியம் ஒழுங்குபடுத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் குழப்பமான அறிவிப்புகளை வெளியிடுவதால், உண்மையில் மானியம் கிடைக்குமா?, அல்லது 2018க்கு பின் மானியம் தொடருமா? என்பது குறித்து தெளிவான அறிவிப்பு இல்லாமல் மக்களை மத்திய அரசு குழப்பி வருகிறது.

இந்த அறிவிப்பால் மத்திய அரசு என்ன விதமான அறிவிப்பை முறைப்படிவௌியிட்டு இருக்கிறது, எதை பின்பற்றுவது, 2018ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பின் மானியம் ரத்தாகுமா? என்பது குறித்து தெரியாமல் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

மம்தா பானர்ஜி கடும் கண்டனம்....

மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கொல்கத்தாவில் நிருபர்களிடம கூறியதாவது-

மத்திய அரசு சமையல் கியாஸ் மானியத்தை 2018ம் ஆண்டு மார்ச் மாதத்தோடு நிறுத்த முடிவு செய்து இருப்பால் ஏழைமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த முடிவு சாமானிய மக்களுக்கு பெரிய வேதனையைத் தரும்.

மக்களுக்கு மானியம் வழங்குவது என்பது ஒரு அரசின் சமூக கடமை. மனிதநே கடமை. மானியம் என்பது, ஒருவரின் தனிப்பட்ட நிதியில் இருந்து கொடுப்பதில்லை, மக்களின் வரிப்பணத்தில் இருந்து தரப்படுகிறது. மக்களைப் பற்றி கவலைப்படாமல்மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.