செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால் மக்கள் அதிர்ச்சி அடைந்து, பொருளாதார நடவடிக்கைகள் முடங்கி இருக்கும் நிலையில், மக்களையும், பொருளாதாரத்தையும் ஊக்கப்படுத்தும் வகையில், 2017-18ம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் பல சலுகைகள் இடம் பெறலாம் எனத் தெரிகிறது.
இதில் குறிப்பாக வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது. இது குறிப்பாக நடுத்தர குடும்பத்தினருக்கு பெரும் நிம்மதி அளிக்கும் விஷயமாகும். இதுபோல் பல சலுகைகைகளை அளிக்க மத்தியஅரசு திட்டமிட்டு மத்திய பட்ஜெட் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், கடந்த 100 ஆண்டுகளாக ஆங்கிலேயர் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வந்த, பிப்ரவரி மாதம் கடைசி வேலை நாளில் தாக்கல் செய்யப்பட்டு வந்த மத்திய பட்ஜெட், அடுத்த ஆண்டு முதல் பிப்ரவரி 1 ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், நாடுமுழுவதும் ஒரே சீரான வரியான ,
சரக்கு மற்றும் சேவை வரியும் அறிமுகமாகிறது.

இதன் காரணமாக மக்கள் மத்தியில் இந்த பட்ஜெட் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரூபாய் நோட்டு அறிவிப்புக்கு பின், டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்க, பல சலுகைகளை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில், நிதிஅமைச்சர் பொறுப்பு ஏற்று, அருண்ஜெட்லி தாக்கல் செய்யும் 3-வது பட்ஜெட் ஆகும். இதனால், டிஜிட்டல் பரிமாற்றத்தை ஊக்குவிக்கவும், ஜி.எஸ்.டி. வரிக்கு சாதகமாக இருக்கும் வகையில், பட்ஜெட்டில் பல சலுகைகளை அறிவிக்க மத்தியஅரசு அதிகாரிகளிடுன் ஆலோசி்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
வருமானவரி உச்ச வரம்பு
இதில் முக்கியமானது வருமாவரி உச்ச உரம்பு உயர்வு. கடந்த 3 ஆண்டுகளாக நடுத்தர வர்க்கத்தினருக்கு வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படாமல், தொடர்நது ரூ.2.50 லட்சம் என்ற அளவில் இருந்து வருகிறது. இந்த உச்ச வரம்பை வரும் 20171-8 ம் ஆண்டு பட்ஜெட்டில் மாற்றி அமைக்க அரசு ஆலோசித்து வருகிறது. தற்போதுள்ள நிலையில், மக்களின் வாழ்க்கைத் தரம், விலை வாசி உயர்வு, செலவுகளின் பெருக்கம் ஆகியவை காரணமாக இந்த வருமான வரி உச்ச வரம்பு ரூ. 3 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக இருக்கலாம்.
ஹெச்.ஆர்.ஏ.(வீட்டுவசதி) படியில் சலுகை
2-வதாக வேலைக்கு செல்லும் நடுத்தர வர்க்கத்தின் பெரும்பாலான மக்கள், வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். தற்போதுள்ள நாடுமுழுவதும் வீட்டு வாடகை, செலவு ஆகியவை அதிகரித்துள்ளது அரசு உணர்கிறது. ஆதலால், ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வீட்டு வசதி படி 50 சதவீதத்தை அடிப்படை ஊதியத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படலாம். இப்போது இந்த சலுகை மெட்ரோ நகரங்களில் மட்டும் இருக்கும் நிலையில், அனைத்து நகரங்களுக்கும் விரிவு படுத்தப்படலாம்.
மருத்துவச்செலவில் சலுகை
கிராமப்புற மக்களின் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், சுகாதாரத்தை அதிகரிக்கும் வகையிலும் சலுகைகள் இருக்கலாம். அதாவது, மக்கள் அதிகமாக உடல்நலத்துக்கு செலவுசெய்ய தூண்டப்படும்.
அதாவது, குடும்பத்தில் மருத்துவச்செலவு செய்தால், ஆண்டுக்கு ரூ. 15 ஆயிரம் வரை விலக்கு அளிக்கப்பட்டு, அதை திரும்பப் பெற்றுக்கொள்ளும் நடைமுறை இப்போது இருக்கிறது. அதை திருத்தி, இரு மடங்காக அதிகரிக்க மத்தியஅரசு ஆலோசித்து வருகிறது. இதாவது, இனி ரூ. 30 ஆயிரம் வரையிலோ அல்லது அதற்கு மேல் செலவு செய்து வருமானவரியில் இருந்து விலக்கு பெற்று திரும்ப் பெறலாம்.

சேமிப்புக்கு ஊக்கம்...
வருமானவரி 80 சி பிரிவின் படி, தனிபர் நபர் ரூ.1.5 லட்சம் வரை செய்யும் முதலீடுகளுக்கு இப்போது எந்த வரியும் விதிக்கப்படுவது இல்லை. மக்களின் சேமிப்பை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு கடன்பத்திரங்கள், பங்குப்பத்திரங்களில் முதலீடுசெய்வதையும், சேமிப்பை அதிகப்படுத்தும் வகையில், முதலீடு வரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்தப்படலாம்.
மேலும், இப்போதுள்ள நடைமுறையின்படி ஒருவர் ஒரு வீட்டுக்கு மேல் சொந்தமாக வைத்திருந்து அதன் மூலம் வருவாய்ஈட்டி வந்தால், அதற்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வரி நீக்கப்படலாம்.
