பேராசிரியர்களுக்கு 7வது ஊதிய ஆணைக்குழு அறிக்கையின் படி, மாதம் ரூ.40,000 ஆயிரம் வரை சம்பள உயர்வு இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. வரும் மே மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைப்பெற உள்ளதால் மத்திய அரசு பல்வேறு முக்கிய திட்டங்களை மக்களுக்குமாக நடை முறைப்படுத்தி வருகிறது.

சமீபத்தில், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஸ்மார்ட் கார்டு விவரத்தை அடிப்படையாக கொண்டு, ரூ.5 லட்சத்திற்கான காப்பீட்டு திட்டத்தை அவரவர் வீட்டிற்கே அனுப்பியது மத்திய அரசு.

இந்த நிலையில், பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊழியர்களுக்கு சம்பள உயர்விற்கான வழியை ஏற்படுத்தி உள்ளது மத்திய பாஜக அரசு. அதாவது,7வது ஊதியக்குழுவின் வரையறைபடி இம்மாதம் மூன்றாம் வாரம் முதல் சில நன்மைகள் கிடைக்கப்பெறும். ஆசிரியர்களுக்கு மட்டுமல்லாது, கல்லூரி மற்றும் பல்கலைகழகங்களில் பணி புரியும் ஊழியர்களும் அவர்களது சம்பளத்தில் இருந்து  ரூ.7 ஆயிரம் வரை  சம்பளம் உயர்வு பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்த அறிவிப்பை கடந்த நவம்பர் மாதம் 2 ஆம் தேதி யுஜிசி வெளியிட்டு  இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

அதாவது, கல்வி ஊழியர்களுக்கு மத்திய அரசு நேரடியாக சம்பள உயர்வை அறிவிக்கவில்லை. ஆனால் ஊதிய குழு பரிந்துரையின்படி, அனைத்து மாநிலமும் இந்த முறையை பின்பற்றி ஆசிரியர்ககளுக்கு சம்பளம் வழங்க வேண்டும் என தெரிவித்து இருந்தது. இருந்த போதிலும் ஒரு சில மாநிலங்கள் இதை கடைப்பிடிக்காமல் உள்ளதால், நாடு முழுவதும் புதிய ஊதிய அளவை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு நிவாரணம் வழங்க முடிவு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.