மொபைல் போனில் சார்ஜ் போட்டுக் கொண்டே பேசிக் கொண்டிருந்த இளம்பெண் திடீரென அந்த போன் வெடித்துச் சிதறியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஓடிசா மாநிலம் கெரியகனி  கிராமத்தைச் சேர்ந்தவர் உமா ஓரம் . இவர் அண்மையில்  தன் உறவினர்களிடம் செல் போனில் பேசிக் கொண்டிருந்தார். . அப்போது மொபைல் போனில் சார்ஜ் குறைந்ததால் உடனடியாக சார்ஜ் போட்ட நிலையிலேயே போனில் பேசியுள்ளார். அப்போது  போன் திடீரென்று வெப்பம் அதிகரித்து வெடித்துச் சிதறியுள்ளது.

இதையடுத்து  உமாவின்  குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர்.. கைகள் மற்றும் உடலின் சில பாகங்களில் காயங்களோடு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.

உமா  பயன்படுத்திய போன் நோக்கியா நிறுவனத்திற்கு சொந்தமானது  2010-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நோக்கியா 5233 தான் அது என்றும் உமாவின் சகோதரர் தெரிவித்தார்.