Cell phone and internet bill is going to increase GST from july 1

ஜூலை 1-ந்தேதி முதல் நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) அமலாகும் நிலையில், செல்போன் ரீசார்ஜ் கட்டணம், பிராட்பேண்ட் இன்டர்நெட் கட்டணம் ஆகியவற்றுக்கு செலுத்தும் பணத்தின் அளவும் அதிகரிக்க இருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதற்கு முன் 15 சதவீதம் சேவை வரியை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வசூலித்து வந்த நிலையில், ஜூலை 1-ந்தேதிமுதல் ஜி.எஸ்.டி. வரியில் 18 சதவீதம் வசூலிக்க இருக்கின்றன. இதனால், ஏறக்குறைய 3 சதவீதம் வரி உயர்வு அமலாகிறது.

ஜி.எஸ்.டி. வரி தொலைத்தொடர்பு சேவைகளுக்கு 18 சதவீதம் விதிக்கப்பட்டுள்ளது.இதற்கு முன் 15 சதவீதம் மட்டுமே இருந்தது.

இதன் தாக்கம் வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

அதாவது நீங்கள் மாதம் ஆயிரம் ரூபாய் இன்டர்நெட் கட்டணம் செலுத்தினால், ஜூலை 1-ந்தேதிக்கு பின், ரூ.1030 ஆக செலுத்த வேண்டியது இருக்கும். 

அதேசபோல ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு டாக் டைம் குறைக்கப்படலாம் '' எனத் தெரிவித்தார்.