ஒவ்வொரு ஆண்டும் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பெயர் பட்டியலை பிரபல போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டும் அதிகம் சம்பாதிக்கும் நூறு பிரபலங்களின் பெயர்களை வெளியிட்டு உள்ளது போர்ப்ஸ் பத்திரிக்கை.

இந்த பட்டியலில் முத்த இடத்தை பிடித்தவர் சல்மான் கான். இவர் இந்த ஆண்டு 253.35 கோடி ரூபாய் வருமானம் கொண்டுள்ளார். இதி குறிப்பாக இவர் இந்த ஆண்டு நடித்த படங்களான டைகர் ஜிந்தா ஹே, ரேஸ் 3 படங்கள் மற்றும் அவர் நடித்த பல முக்கிய விளம்பரங்கள் மூலம் இவ்வளவு வருமானத்தை பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு அடுத்த படியாக, மேலும் கடந்த மூன்று ஆண்டுகளாகவே சல்மான் கான் முதலிடத்தை தக்க வைத்து உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி - இரண்டாம் இடத்தை பிடித்து உள்ளார். விராட் கோலியின் இந்த ஆண்டு வருமானம் 228 கோடி ரூபாய். மூன்றாம் இடத்தை 2.O படத்தில் நடித்துள்ள நடிகர் அக்‌ஷய் குமாரும் (185 கோடி ), நான்காம் இடத்தில் (ரூ.112 கோடி) நடிகை தீபிகா படுகோனும் உள்ளனர்.

இந்த வரிசையில், தல தோனி (101 கோடி) பெற்று ஐந்தாவது இடத்திலும் மற்றும் சச்சின் (80 கோடி) பெற்று ஒன்பதாவது  இடத்திலும் உள்ளனர். இதே போன்று ரூ.66 கோடி வருவாயுடன் ஏ.ஆர் .ரகுமான் 11-வது இடத்திலும், ரஜினிகாந்த் ரூ.50 கோடி வருவாயுடன் 14 ஆவது இடத்திலும், ரூ.15.7 கோடி வருவாயுடன் நயன்தாரா 69 ஆவது இடத்தையும் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.