பள்ளிக்கு வேனில் செல்லும் மாணவ-மாணவியர்களை பாதுகாப்பாக ஏற்றி இறக்கும் பணிகளில் ஆசிரியைகளை பயன்படுத்தக் கூடாது என்று சி.பி.எஸ்.இ. கூறியுள்ளது.
பள்ளி ஆசிரியர்கள் கற்பித்தல் தவிர்த்த பணிகளில் ஈடுபடுத்துவதை தடுப்பதை உறுதி செய்யும் வகையில் சி.பி.எஸ்.இ. நிர்வாகம் பள்ளிகளுக்கு அறிவுறுத்தல் கடிதத்தை அனுப்பியுள்ளது.

அந்த அறிவுறுத்தல் கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது:- ஒவ்வொரு பள்ளி வேனிலும் ஒரு ஆசிரியர் இருக்க வேண்டும் என்று முன்பு உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால், அவர்கள் பள்ளிச் சிறார்களை ஏற்றி, பாதுகாப்பாக இறக்கும் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது. ஒவ்வொரு வேனிலும், பள்ளிச் சிறார்களின் பாதுகாப்புக்கு பெண் பாதுகாவலர்களை பள்ளி நிர்வாகம் நியமிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.
