Asianet News TamilAsianet News Tamil

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகிறது.. ஆன்லைனில் எப்படி தெரிந்து கொள்வது?

சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

CBSE General Exam Results Released Today.. How to Check Online?
Author
First Published May 5, 2023, 10:32 AM IST

மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 15 முதல் மார்ச் 21 வரை நடைபெற்றது. அதே போல் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கும் பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வை சுமார் 21 லட்சம் மாணவர்களும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை 16 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுதி இருந்தனர். 

இந்த நிலையில் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைனிலேயே  சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள முடியும். 

இதையும் படிங்க : மாணவிகளுக்கு கன்னித்தன்மை சோதனை..! ஆளுநர் புகாரால் தலைமைச் செயலாளருக்கு திடீர் நோட்டீஸ்

எந்தெந்த இணையதளங்களில் சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை பார்க்கலாம்

https://cbseresults.nic.in/

https://results.cbse.nic.in/

www.cbse.nic.in

cbse.gov.in

தேர்வு முடிவுகளை எப்படி சரிபார்ப்பது..?

results.cbse.nic.in அல்லது cbse.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்லவும். 

முகப்பு பக்கத்தில் 2022 Results என்ற பகுதி இருக்கும்.

10-ம் வகுப்பு மாணவர் என்றால் Secondary School Compartment Examination (Class X) Results 2023  என்ற லிங்கை கிளிக் செய்யவும்

12-ம் வகுப்பு மாணவர் என்றால் Senior School Certificate Compartment Examination (Class XII) Results 2023 என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். 

பதிவெண், பாஸ்வேர்டு போன்ற விவரங்களை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்

பின்னர் தேர்வு முடிவுகளை பார்க்க முடியும்

உங்கள் பள்ளி எண்ணை எப்படி கண்டுபிடிப்பது..?

தேர்வு முடிவை சரிபார்க்கும் போது சிபிஎஸ்இ உங்கள் பள்ளி எண்ணைகேட்கலாம். எனவே பள்ளி எண்ணை தெரிந்து கொள்வதற்கான நேரடி இணைப்பு இதோ. 

 

டிஜி லாக்கர் மூலம் தேர்வு முடிவை எப்படி பதிவிறக்குவது..?

www.digilocker.gov.in என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்

cbse board results என்ற இணைப்பை கிளிக் செய்யவும்

தேவையான தகவலை உள்ளிடவும்

தேர்வு முடிவுகள் காண்பிக்கப்படும். பின்னர் அதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம்

இதையும் படிங்க : இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று.. இந்தியாவில் பார்க்க முடியுமா?

 

Follow Us:
Download App:
  • android
  • ios