சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலத் தேர்வு வினாத்தாளில்  கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்விகளை கேள்வித்தாளில் இருந்து நீக்குவதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளதோடு, அந்த கேள்விக்கு அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பின் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. 

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆங்கிலத் தேர்வு வினாத்தாளில் கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்விகளை கேள்வித்தாளில் இருந்து நீக்குவதாக சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்துள்ளதோடு, அந்த கேள்விக்கு அனைத்து மாணவர்களுக்கும் முழு மதிப்பின் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் சிபிஎஸ்இ பள்ளி வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த சிபிஎஸ்இ பள்ளிகள் முழுக்க முழுக்க மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில், அதன் கல்விக்கொள்கையில் இயங்கி வருறது. இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி நடைபெற்ற சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வில் ஆங்கிலத் தேர்வுக்கான வினாத்தாளில் சிறுகுறிப்பில் இருந்து கேட்கப்படும் கேள்விக்கு விடையளிப்பது போன்று இருந்தது. அதில், பெண்கள் தங்கள் கணவருக்கு அடங்கி இருக்க வேண்டும் என்ற பொருளில் கேள்வி இடம்பெற்றது. மேலும், மற்றொரு கேள்வியில், கணவனின் பேச்சை கேட்டால் தான் குழந்தைகளின் கீழ்படிதலை தாயால் பெற முடியும் என்றும், குழந்தைகள் மீதான பெற்றோரின் அதிகாரத்தை பெண் விடுதலை அழித்துவிடுகிறது என்பது போன்ற கருத்துகள் இடம்பெற்றிருந்தது.

மேலும் இப்போதெல்லாம் மனைவிமார்கள் குழந்தைகளை சரியாக வளர்ப்பதில்லை. பெண் சுதந்திரத்தால் குடும்பத்தில் அவர்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது. இதனால் பெற்றோர் என்ற கட்டமைப்பை அவர்கள் அழிக்கிறார்கள். முன்பெல்லாம் ஆண்களுக்கு கீழ்படிந்து நடந்தார்கள். இப்போது அப்படி இல்லை. அதனால் அவர்களைப் பார்த்து வளரும் குழந்தைகளும் ஒழுங்கீனமாக வளர்கின்றன. அவர்கள் கீழ்படியாமல் இருந்தால் குழந்தைகள் ஒழுக்கமாக வளர்வார்கள். குழந்தைகளை நல்ல மனிதனாக வளர்த்தெடுப்பதில் மனைவியாகவும், தாயாகவும் பெண்கள் சிறப்பாக செயல்படுவதில்லை எனவும் இடம்பெற்றிருந்தது. இந்த பாராவுக்கு தலைப்பு வைக்க வேண்டும் எனக்கூறி நான்கு ஆப்சன்களையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மத்திய அரசின் பிற்போக்குத்தனமான கருத்தை புத்தகத்தில் திணித்ததாகவே இது காட்டியதாக பலர் கண்டனம் தெரிவித்தனர். இதுக்குறித்து நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் போது பேசிய சோனியாகாந்தி, சிபிஎஸ்இ தேர்வில் பெண்கள் மீதான வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கேள்வி இடம் பெற்றதற்கு மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் இந்த கேள்விகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார். இளைஞர்களின் எதிர்காலத்தை நசுக்க பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் சூழ்ச்சி செய்வதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சிபிஎஸ்இ அந்தக் கேள்வியை வினாத்தாளிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. மேலும் அந்தக் கேள்வியை எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் முழு மதிப்பெண் அளிக்கப்படும் எனவும் கூறியுள்ளது. முன்னதாக சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு சமூகவியல் தேர்வில், குஜராத் வன்முறை குறித்து சர்ச்சையான கேள்வி இடம்பெற்றிருந்தது. அந்தக் கேள்வியில், 2002ஆம் ஆண்டு குஜராத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை எந்த அரசின் கீழ் நடந்தது? என கேட்கப்பட்டிருந்தது. சர்ச்சை எழுந்ததும் சிபிஎஸ்இ மன்னிப்பு கேட்டது. இந்த நிலையில் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத் தேர்வில் ஆங்கிலத் தேர்வுக்கான வினாத்தாளில் இத்தகைய கேள்வியை கேட்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.