Asianet News TamilAsianet News Tamil

#BREAKING 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து... மத்திய அரசு அதிரடி அறிவிப்பு...!

12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக மத்திய   அரசு அறிவித்துள்ளது. 

CBSE Class XII Board Exams cancelled
Author
Delhi, First Published Jun 1, 2021, 7:44 PM IST

இந்தியாவில் கொரோனா 2வது அலை கோரதாண்டவம் ஆடி வருகிறது.  எனவே சிபிஎஸ்இ மாணவர்களுக்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்வதாக மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்தது. அத்துடன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளையும் ஒத்தி வைப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி 'ஜூலை 15  முதல் ஆகஸ்ட் 26க்குள் தேர்வுகளை நடத்தி, செப்டம்பரில் முடிவுகளை வெளியிடலாம்' என, சி.பி.எஸ்.இ., தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

CBSE Class XII Board Exams cancelled

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதையடுத்து பிளஸ் 2 தேர்வுகளை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் வரும் 3ம் தேதிக்குள் இறுதி முடிவு அறிவிக்கப்படும் என, மத்திய அரசு தரப்பில் பதில் அளித்திருந்தது. 

CBSE Class XII Board Exams cancelled

எனவே சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்யலாமா? என்பது குறித்து பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர்கள் அமித் ஷா, பிரகாஷ் ஜவடேகர் மற்றும் உயர் அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றனர். ஆலோசனையை கூட்டத்தை தொடர்ந்து, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளார். மாணவர்களின் நலன் கருதி சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளது. 


 

Follow Us:
Download App:
  • android
  • ios