சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு எப்போது?

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு முடிவுகள் 2023 விரைவில் சிபிஎஸ்இ அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

CBSE Class 10th, 12th Result 2023: Board Exam Results To Be Declared Soon At results.cbse.nic.in

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) நடத்திய 2023ஆம் ஆண்டுக்கான 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு தகவல்களின்படி, சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் இவகுப்பு முடிவுகள் 2023 ஏப்ரல் இறுதிக்குள் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது. இருப்பினும், சிபிஎஸ்இ நிர்வாகம் 2023 தேர்வு முடிவுகள் குறித்து எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை. 

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், மாணவர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியலை வாரியத்தின் results.cbse.nic.in மற்றும் cbse.gov.in  ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்வையிடலாம்.

சிபிஎஸ்இ தேர்வுகள்:

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடத்தப்பட்டன. இரண்டு வகுப்புகளுக்கும் பிப்ரவரி 15ஆம் தேதி தேர்வுகள் தொடங்கின. 10ஆம் வகுப்புக்கு மார்ச் 21ஆம் தேதியும் 12ஆம் வகுப்புக்கு ஏப்ரல் 5ஆம் தேதியும் தேர்வுகள் முடிவடைந்தன.

38 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை எழுதியதாகக் கூறப்படுகிறது. பத்தாம் வகுப்பு தேர்வை 21,86,940 மாணவர்களும், பன்னிரண்டாம் வகுப்பு தேவ்வை 16,96,770 மாணவர்களும் தேர்வெழுதியுள்ளனர்.

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதளங்களுக்குச் சென்று பார்க்கலாம். பார்க்கலாம்:

1. cbse.gov.in

2.  results.cbse.nic.in

3.  parikshasangam.cbse.gov.in

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios