CBSE 10TH RESULTS WILL BE PUBLISHED DAY AFTER TOMMORROW

சி.பி.எஸ். இ.,10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள்…. நாளை மறுநாள் வெளியீடு

சி.பி.எஸ். இ.,10-ம் வகுப்புதேர்வு முடிவுகள் வரும் சனிக்கிழமை அதாவது நாளை மறுநாள் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கடந்த மார்ச் 9-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்றது. நாடு முழுவதும் சி.பி.எஸ். இ., 10-ம் வகுப்பு பொது தேர்வை 19 லட்சத்து 80 ஆயிரம்ம் மாணவ,மாணவியர் எழுதி உள்ளனர்.

இந்த தேர்வு முடிவுகள் வரும் சனிக்கிழமை அதாவது நாளை மறுநாள் வெளியிடப்படும் என சி.பி.எஸ். இ அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

மேலும் தேர்வு முடிவுகள் www.cbse.inic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.