கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டன. அந்தச் சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்க சிபிஎஸ்இ நிர்வாகம் இரண்டு பருவத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தியது.
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டன. அந்தச் சூழல் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்க சிபிஎஸ்இ நிர்வாகம் இரண்டு பருவத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தியது. அதன்படி 2021- 22ம் கல்வி ஆண்டில் சிபிஎஸ்இ சார்பில் பொதுத் தேர்வு இரண்டாகப் பிரிக்கப்பட்டு, முதல் பருவத் தேர்வு நவம்பர்- டிசம்பர் மாதங்களிலும், இரண்டாவது பருவத் தேர்வு மார்ச் - ஏப்ரல் மாதங்களிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- ஷாக் நியூஸ் ! இனி ஞாயிற்றுக்கிழமையிலும் பள்ளி.. தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு !

சிபிஎஸ்இ தேர்வு
இந்நிலையில், சிபிஎஸ்இயின் 10வது மற்றும் 12வது பருவம் 1 தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தில் ஆப்லைன் முறையில் நடைபெற்றது. சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு நவம்பர் 30ம் தேதி முதல் தொடங்கப்பட்டது மற்றும் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு டிசம்பர் 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டது. சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் பருவத்திற்கான தேர்வு முடிவுகள் மார்ச் மாதத்தில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அனைத்து பணிகளும் நிறைவடைந்ததையடுத்து மார்ச் 2வது வாரத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டு வந்தது.

தேர்வு முடிவுகள் பார்ப்பது எப்படி?
இந்நிலையில், இன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் இன்று எந்த நேரத்திலும் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது முதல் பருவ மதிப்பெண்ணை cbse.gov.in மற்றும் cbseresults.nic.in என்கிற இணையதள முகவரியில் சென்று பார்த்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
