CBI Tejaswi asks for a while before

ரயில்வே துறை ஓட்டல்களை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்திற்கு விட்டதில் நடந்த ஊழல் வழக்கில் லாலு பிரசாத்தின் மகனும், பீகார் முன்னாள் துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், விசாரணைக்கு சி.பி.ஐ. அதிகாரிகள் முன் ஆஜராக 15 நாட்கள் கால அவகாசம் கேட்டுள்ளார்.

கடந்த 2006-ல் லாலு பிரசாத் மத்திய ரயில்வே துறை அமைச்சராக இருந்தபோது ரயில்வே துறையை சேர்ந்த 2 ஓட்டல்கள் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்திற்கு விடப்பட்டது. இதற்கு ஈடாக டிலைட் மார்க்கெட்டிங் என்ற பினாமி கம்பனி ஒன்றின் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 3 ஏக்கர் நிலத்தை லஞ்சமாக பெற்று ஊழல் செய்துள்ளதாக முன்னாள் ரயில்வே துறை அமைச்சர் லாலு பிரசாத் , அவரது மனைவி ராப்ரி தேவி மற்றும் அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தேஜஸ்விக்கு சி.பி,.ஐ. உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த வழக்கில் நேற்று ஆஜரான அவரது வழக்கறிஞர், தேஜஸ்விக்கு 15 நாட்கள் கால அவகாசம் தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.