Asianet News TamilAsianet News Tamil

ஊழல் வழக்கு.. லாலு பிரசாத் தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை..!

பீகாரில் லாலு பிரசாத் யாதவுக்கு தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

CBI Raids 15 Locations Linked to Lalu Prasad Yadav
Author
Bihar, First Published May 20, 2022, 8:53 AM IST

பீகாரில் லாலு பிரசாத் யாதவுக்கு தொடர்புடைய 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வரும் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலத்தில் 1990 முதல் 1996 வரை முதல்வராக இருந்த ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆட்சிக்காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக அரசு கருவூலத்தில் இருந்து ரூபாய் 139 கோடி பணம் மோசடி செய்தார் என வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் 73 வயதான லாலு பிரசாத் யாதவுக்கு கடந்த பிப்ரவரி மாதம் ராஞ்சி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.60 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

CBI Raids 15 Locations Linked to Lalu Prasad Yadav

இதைத் தொடர்ந்து, கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து சிறையில் இருந்த லாலு பிரசாத் யாதவ் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.  இதனையடுத்து, லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். 

CBI Raids 15 Locations Linked to Lalu Prasad Yadav

இந்நிலையில், ரயில்வே பணிகளுக்கான தேர்வில் முறைகேடு நடந்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து  லாலு பிரசாத் யாதவ் தொடர்புடைய டெல்லி, பீகார் உள்ளிட்ட 17 இடங்களில் சிபிஐ சோதனை நடைபெற்று வருகிறது. லாலு பிரசாத் யாதவ், அவரது மகள் மிசா பாரதி மீது புதிய லஞ்ச வழக்கு பதிவு செய்து அவர்களது வீடுகளில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.  பீகார் தலைநகர் பாட்னாவில் மட்டும் 4 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios