சி.பி.ஐ.யின் புதிய இயக்‍குனராக திரு.ராகேஷ் அஸ்தானா நியமிக்‍கப்பட்டுள்ளார். 

தற்போது சி.பி.ஐ. இயக்‍குனராக உள்ள திரு.அனில்குமார் சின்காவின் பதவிக்‍காலம் முடிவடைவதை அடுத்து, புதிய இயக்‍குனராக குஜராத்தைச் சேர்ந்த IPS அதிகாரி திரு.ராகேஷ் அஸ்தானா நியமிக்‍கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் பரபரப்பாக அறியப்பட்ட கோத்ரா சபர்மதி பயங்கரவாத வழக்கின் விசாரணை அதிகாரியாக அஸ்தானா பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.