ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கானை மிரட்டி ரூ.25 கோடி பறிக்க முயன்ற அதிகாரி யார்?
போதைப்பொருள் வழக்கில் தனது மகன் ஆர்யன் கானைக் காப்பாற்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மிரட்டி, ரூ.25 கோடி தருமாறு மிரட்டியதாக சமீர் வான்கடே மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
மும்பையில் இருந்து கோவா நோக்கி கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி புறப்பட்டுச் சென்ற கார்டெலியா என்ற சொகுசு கப்பலில் கொடுக்கப்பட்ட விருந்தில் போதைப்பொருள் உபயோகிக்கப்படுவதாகவும், அதில் பிரபலங்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இருப்பதாகவும் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
போதைப்பொருள் தடுப்பு படையினர் அங்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானின் ஆர்யன்கான் உட்பட பலர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. இந்த தகவல் பாலிவுட் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த வழக்கில் ஆர்யன்கான் 4 வாரங்கள் சிறையில் இருந்தார்.
இதையும் படிங்க..பாலியல் தொழிலில் ஈடுபட்ட 2 பிரபல நடிகைகள்.. ஒரு நைட்டுக்கு 25 ஆயிரம் - வெளியான அதிர்ச்சி தகவல்
இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 2022 ஆம் ஆண்டு மே மாதம் போதுமான ஆதாரங்கள் இல்லாத நிலையில் ஆர்யன் கான் விடுதலை செய்யப்பட்டார். இதனிடையே ஆர்யன் கானை கைது செய்த மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி சமீர் வான்கடே வழக்கில் இருந்து ஆர்யன் கானை விடுவிக்க அவர் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது.
போதைப்பொருள் வழக்கில் தனது மகன் ஆர்யன் கானைக் காப்பாற்ற பாலிவுட் நடிகர் ஷாருக்கானை மிரட்டி, ரூ.25 கோடி தருமாறு மிரட்டியதாக மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது. ஆர்யன் கானுடன் எடுக்கப்பட்ட செல்ஃபி வைரலாக பரவிய சுயேட்சை சாட்சியான கே.பி.கோசாவி, சிபிஐயின் எப்ஐஆரில் குற்றம் சாட்டப்பட்ட நம்பர் ஒன் என்று பெயரிடப்பட்டுள்ள அப்போதைய என்சிபி மண்டல இயக்குநர் சமீர் வான்கடே சார்பில் ஷாருக்கானிடம் இருந்து ரூ.25 கோடியை மிரட்டி பணம் பறிக்க முயன்றார்.
2008 பேட்ச் ஐஆர்எஸ் அதிகாரியான சமீர் வான்கடே, என்சிபியின் கண்காணிப்பாளர் வி.வி சிங் மற்றும் ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கில் அப்போதைய புலனாய்வு அதிகாரி ஆஷிஷ் ரஞ்சன் மற்றும் கே.பி.கோசாவி மற்றும் அவரது கூட்டாளி டிசோசா ஆகியோருடன் சிபிஐ குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கானை சிக்க வைக்காததற்காக வான்கடே மற்றும் பலர் 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது. சமீர் வான்கடே தனது வெளிநாட்டு பயணங்களை சரியாக விளக்கவில்லை என்றும், அவரது வெளிநாட்டு பயணங்களுக்கான செலவை தவறாக அறிவித்ததாகவும் NCBயின் விஜிலென்ஸ் கிளை குறிப்பிட்டுள்ளதாகவும் FIR கூறுகிறது.
விஜிலென்ஸ் அறிக்கையின் அடிப்படையில் சிபிஐ நடத்திய முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, வான்கடே மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விலிஜென்ஸ் விசாரணையில், சமீர் வான்கடே ஊழல் மூலம் சொத்துக் குவித்தது கண்டுபிடிக்கப்பட்டது. எப்ஐஆர் பதிவு செய்த பின்னர் இந்த வழக்கு தொடர்பாக சமீர் வான்கடேவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
இதையும் படிங்க..கர்நாடக தேர்தல்: சறுக்கிய பாஜக & ஜேடிஎஸ்.. காங்கிரசின் வெற்றிக்கு உதவிய டாப் 5 காரணங்கள்