Odisha Train Accident : பல உயிர்களை குடித்த ஒடிசா ரயில் விபத்து.. மூவர் கைது - CBI-யின் அதிரடி நடவடிக்கை!
ஒடிசா ரயில் விபத்தில் அந்த மூவரின் அஜாக்ரதையான செயல்கள் தான் விபத்தை ஏற்படுத்தியதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

ஒடிசா மாநிலத்தில் 250க்கும் மேற்பட்ட உயிர்களை பலி வாங்கிய கோர ரயில் விபத்து தொடர்பான வழக்கில் மூன்று பேரை தற்பொழுது சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அருண்குமார் மொஹாந்தா, அமீர் கான் மற்றும் பப்பு குமார் ஆகிய மூவர் மீது இரண்டு பிறவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஒடிசாவின் பாலசோரில் கடந்த மாதம் நேர்ந்த கோர ரயில் விபத்து பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 280க்கும் அதிகமான பயணிகள் இந்த விபத்தில் இறந்தனர். அதே சமயம் சுமார் 1,000க்கும் மேற்பட்ட பயணிகள் காயம் அடைந்து இன்றளவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சுமார் 83 பேரின் உடல்கள் இன்னும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படாமல் இருந்து வருகின்றது.
இதையும் படியுங்கள் : கோவை சௌந்தர் கொலை வழக்கு.. இரு திருநங்கைகள் உட்பட மூவருக்கு ஆயுள் தண்டனை!
இந்நிலையில் இந்த விபத்தில் குற்றவியல் சதி உள்ளதா? என்ற கோணத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு விசாரித்து வந்தது. இதனையடுத்து தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீது ஆதாரங்களை அழித்ததாகவும், இறப்பு நேர காரணமாக இருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த மூவரின் அஜாக்ரதையான செயல்கள் தான் விபத்தை ஏற்படுத்தியதாக ஆதாரங்கள் கூறுகின்றன. இந்த கோர விபத்தை அடுத்து தென்கிழக்கு ரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி, அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டார், மேலும் அனில் குமார் மிஸ்ரா அந்தப் பொறுப்பை தற்போது ஏற்று நடத்தி வருகின்றார்.
இதையும் படியுங்கள் : குழந்தை இல்லாத ஏக்கத்தில் 2 மாத குழந்தையை கடத்திச் சென்ற பெண் உள்பட 2 பேர் கைது!