காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக ஆய்வு குழு சமர்ப்பித்த மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனுடன் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
நீதிபதிகள் விசாரணையை தொடங்கியபோது, மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வரவில்லை. இதனால், இந்த வழக்கை சிறிது நேரம் ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
