கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சனிக்கிழமையான நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 429 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். காலை முதல் இரவு வரை சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்தி காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. அதில், ஒரேநாளில் ரூ.5.13 கோடி கிடைத்துள்ளது.
கொரோனா தளர்வுக்கு பிறகு 3 ஆண்டுகளுக்கு பின் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரேநாளில் 5 கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் காணிக்கை கிடைத்துள்ளது.
கொரோனா பரவல்
கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் 20ம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி கும்பிட தடை விதிக்கப்பட்டது. பின்னர் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்ட நிலையில் குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் மட்டும் கோவிலுக்கு வந்து சாமி கும்பிட திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனுமதி அளித்து வந்தது.
இதையும் படிங்க;- இந்த நாட்களில் சிபாரிசு கடிதங்களுடன் வந்தாலும் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி.!

தரிசன டிக்கெட் எண்ணிக்கை அதிகரிப்பு
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக தினமும் 25 ஆயிரம் பக்தர்களுக்கு ஏழுமலையானை வழிபட அனுமதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போதைய நிலையில் பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. தற்போது திருப்பதியில் உள்ள கோவிந்தராஜஸ்வாமி சத்திரம், சீனிவாசம், பூதேவி காம்பளக்ஸ் உள்ளிட்ட இடங்களில் தினசரி, 30 ஆயிரம் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விரைவு தரிசன டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும், 28 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து ஏழுமலையான் தரிசனத்திற்காக பக்தர்கள் படையெடுக்கத் தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களுக்கு ஏற்ப உண்டியலில் காணிக்கையாகவும், தலை முடியை காணிக்கையாகவும் மற்றும் இதர நன்கொடைகளாகவும் வழங்குகின்றனர். அதன்படி ஏழுமலையான் கோயிலில் தினந்தோறும் 2 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை உண்டியல் காணிக்கை கிடைப்பது வழக்கம். ஒரு சில நாட்களில் 4 கோடி ரூபாய் வரை கிடைப்பது உண்டு.
இதையும் படிங்க;- Tirumala Tirupati: திருப்பதி போகும் பக்தர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. தேவஸ்தானம் எடுத்த அதிரடி முடிவு..!

ஒரே நாளில் 5 கோடி காணிக்கை
கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சனிக்கிழமையான நேற்று ஒரே நாளில் 80 ஆயிரத்து 429 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். காலை முதல் இரவு வரை சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்தி காணிக்கை நேற்று எண்ணப்பட்டது. அதில், ஒரேநாளில் ரூ.5.13 கோடி கிடைத்துள்ளது. இதுதவிர நேற்று ஒரேநாளில் 38,182 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். கொரோனா தளர்வுக்கு பிறகு 3 ஆண்டுகளுக்கு பின் ஒரேநாளில் 5 கோடி ரூபாய்க்கு மேல் உண்டியல் காணிக்கை கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
