குஜராத்தில் நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை 750 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம், நகைகள், மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல்ஆணையர் ராஜீவ் குமார் தெரிவி்த்தார்
குஜராத்தில் நடந்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் இதுவரை 750 கோடி ரூபாய் மதிப்புள்ள ரொக்கப்பணம், நகைகள், மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல்ஆணையர் ராஜீவ் குமார் தெரிவி்த்தார்
குஜராத்தில் உள்ள 182 சட்டப்பேரவைத்தொகுதிகளுக்கும் இரு கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் கட்டமாக 19 மாவட்டங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடந்தது. இதில் 60 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2வது கட்டத் தேர்தல் வரும் 5ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் முடிகிறது.
குஜராத் சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு… 60.20% வாக்குகள் பதிவு!!
இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு தேர்தலின்போது குஜராத்தில் கைப்பற்றப்பட்ட ரொக்கப்பணம், நகைகள், போதைப்பொருட்கள் மதிப்பைவிட 7 மடங்கு அதிகமாக இந்த தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அளித்த பேட்டியில் “ நவம்பர் 30ம் தேதிவரை குஜராத்தில் ரூ.750 கோடி மதிப்பிலான நகைகள், ரொக்கப்பணம், போதைப்பொருட்களை தேர்தல் பறக்கும் படையினர், போலீஸார் பறிமுதல் செய்தனர். இது கடந்த 2017ம் ஆண்டு தேர்தலில் பறிமுதல் செய்யப்பட்ட அளவைவிட 7 மடங்கு அதிகமாகும்.
கடந்த 2017ம் ஆண்டு தேர்தலின்போது ரூ.27 கோடிக்குத்தான் பணம், நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. இந்தமுறை ரூ.750 கோடிக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் மதுபானங்கள் மட்டும் ரூ.15 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, போதைப் பொருட்கள் ரூ.60 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குஜராத் தேர்தலில் வெளிப்படைத்தன்மை!13,065 வாக்குசாவடிகளில் வெப்காஸ்டிங் கண்காணிப்பு
வதோதரா நகரில் மட்டும் ரூ.450 கோடிக்கு ரொக்கப்பணம், நகைகள், போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இலவசப் பொருட்கள் மட்டும் ரூ.171 கோடிக்கு பறிமுதல் செய்யப்பட்டன.
வருவாய்துறை அதிகாரிகள், வருமானவரித்துறை, ஏடிஎஸ் குஜராத், போலீஸார் ஆகியோர் இணைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குஜராத்தில் தேர்தல் நடப்பதால் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, டாமன் டையு எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்களை மனரீதியாக தூண்டிவிடப்படும் அனைத்து காரணிகளும் தடுக்கப்பட்டுள்ளன. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இது மோசமான நடைமுறை, இதை நிறுத்த வேண்டும்.
வாக்காளர்களுக்குப் பணம், பொருட்கள், மது, போதைப்பொருட்கள் வழங்கக்கூடாது. அதைக் கண்காணிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்
