Asianet News TamilAsianet News Tamil

யூடியூபில் கிறிஸ்தவர்கள் பற்றி வெறுப்பூட்டும் பேச்சு… இஸ்லாமிய மதபோதகர் மீது வழக்குப்பதிவு!!

மதபோதகர் வாசிம் அல் ஹிகாமி கிறிஸ்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி அவர் மீது கொச்சி சைபர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

case filed against preacher for hate speech on yotube about christians
Author
Kerala, First Published Jul 5, 2022, 7:40 PM IST

மதபோதகர் வாசிம் அல் ஹிகாமி கிறிஸ்தவர்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி அவர் மீது கொச்சி சைபர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மதபோதகர் வாசிம் அல் ஹிகாமி, கிறிஸ்மஸ் பண்டிகை மற்றும் இயேசுவின் பிறப்பு குறித்து யூடியுபில் இழிவாக பேசியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இதை அடுத்து அவர் மீது புகார் அளித்த பாஜக தலைவர் அனுப் ஆண்டனி, அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்தார். அந்த மனுவின் அடிப்படையில் மலப்புரத்தில் உள்ள கொண்டோட்டியைச் சேர்ந்த வாசிம் அல் ஹிகாமி என்பவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையும் படிங்க: நுபுர் சர்மா மீதான உச்ச நீதி மன்றத்தின் கருத்துக்கு எதிராக 15 முன்னாள் நீதிபதிகள் கொந்தளிப்பு.. பகீர் கடிதம்

அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாநில டிஜிபி மற்றும் சைபர் கிரைம் துறையிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை அடுத்து அனுப் ஆண்டனி, எர்ணாகுளம் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டை அணுகினார். இதை அடுத்து யூடியூப் வீடியோக்களை ஆய்வு செய்த நீதிமன்றம், புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸாரை கேட்டுக் கொண்டது.

இதையும் படிங்க: காளி மாமிசம் சாப்பிடுவார் மது குடிப்பார்; லீனா மணிமேகலை வரிசையில் மஹுவா மொய்த்ரா

இதையடுத்து, கொச்சி சைபர் போலீசார் வாசிம் அல் ஹிகாமி மீது வழக்கு பதிவு செய்தனர். அவர் மீது மத வெறுப்பை உருவாக்குதல் மற்றும் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் வேண்டுமென்றே செயல்பட்டது ஆகிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அல் ஹிகாமி வெறுப்புக் குற்றத்திற்காகப் பதிவு செய்யப்படுவது இது முதல் முறையல்ல. இந்த ஆண்டு ஜனவரியில், கோட்டயம் சைபர் காவல்துறையும் இதேபோன்ற வழக்கை அல் ஹிகாமி மீது பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

Follow Us:
Download App:
  • android
  • ios