case filed against kamal in uttar pradesh

இந்துத் தீவிரவாதம் இல்லை என இனி கூற முடியாது என்று கருத்து தெரிவித்திருந்த கமல் மீது உத்தரப் பிரதேச மாநிலம் பனாரஸ் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சமீபகாலமாக இனவாத பேதமும் பிற்போக்குத்தனமும் கால்பதிக்க முயல்வதாகவும் அதுகுறித்த கமலின் கருத்து என்ன என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் வார இதழ் ஒன்றில் எழுதியிருந்த கமல், இந்து வலதுசாரியில் தீவிரவாதம் இல்லை என இனி கூறமுடியாது. இந்து வலதுசாரி கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது. எங்கே ஒரு ஒரு இந்து தீவிரவாதியை காட்டுங்கள் என இந்து வலதுசாரியால் இனிமேல் கேள்வி எழுப்ப முடியாது. யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டனர் என அதிரடியாக தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

இதற்கு, தமிழகம் உட்பட தேசிய அளவில் இந்து வலதுசாரி அமைப்பினர் கடும் கண்டனங்களை கமலுக்கு தெரிவித்துவருகின்றனர்.

இந்நிலையில், இந்து வலதுசாரி கட்சியான பாஜக ஆளும் மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் பனாரஸ் காவல் நிலையத்தில் கமல் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.