இரக்கமே இல்லையா.. வேண்டுமென்றே நாயை காரால் மோதி நசுக்கிய நபர் - வெளியான CCTV காட்சி - களமிறங்கிய போலீஸ்!
கிரேட்டர் நொய்டாவில் இருந்து ஒரு அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இரக்கமற்ற கார் ஓட்டுநர் ஒருவர், சாலையில் சென்ற ஒரு தெருநாய் மீது, தனது காரை கொண்டு வேண்டுமென்றே ஓஇடித்து நசுக்கிவிட்டு செல்லும் காட்சி தான் அது.
இந்த கொடூரமான காட்சி, அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. மேலும் இந்த காட்சிகள் சமூக ஊடக தளமான எக்ஸ் (ட்விட்டர்) பயனர்களை கோபப்படுத்தியுள்ளது .இந்த படுபாதக செயலை செய்த அந்த குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி நொய்டா காவல்துறையை தங்கள் ட்விட்டர் பதிவில் டேக் செய்து வருகின்றனர் பயனர்கள்.
தற்போது ட்விட்டர் தலத்தில் வைரலாகும் இந்த காட்சிக்கு பதிலளித்த போலீசார், இந்த சம்பவம் குறித்து தாத்ரி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
வெளியான அந்த வீடியோவில் தெரு நாய் ஒன்று சாலையைக் கடக்க முயல்கின்றது, அப்பொழுது எதிரே வரும் காரை வெகு தொலைவில் இருந்தே கண்டதும், அந்த நாய் சாலை கடக்காமல் ஓரமாக செல்ல முயல்வதை நம்மால் காண முடிகின்றது. இருப்பினும் சாலையின் மறு புறம் வந்து கொண்டிருந்த அந்த கார், ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த அந்த தெரு நாயை பார்த்ததும், காரை வலது புறமாக வளைத்து, அந்த நாயின் மீது இரக்கமற்ற முறையில் ஏற்றி செல்வதை அந்த வீடியோ காட்டுகிறது. இதை பார்த்து பதறிப்போன இருவர், அந்த நாயின் அருகில் செல்வதையும் நம்மால் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
நாய் பிரியர்கள் மற்றும் விலங்கு உரிமை ஆர்வலர்கள் உட்பட பல ட்விட்டர் பயனர்கள், அந்த ஓட்டுநரின் நடத்தையை அவதூறாகக் கூறி, நொய்டா காவல்துறையையும், ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பீட்டா இந்தியாவையும் குறிப்பிட்டு பதிவுகளை போட்டு வருகின்றனர்.
திருப்பதியில் 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள் தரிசன நடைமுறை வெளியீடு!