டெல்லி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ராஜ்குமார் ஆனந்த் ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்துள்ளார். இது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டெல்லி சமூக நலன் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை தீடீரென ராஜினாமா செய்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.

சென்ற மார்ச் 21ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு ராஜ்குமார் ராஜினாமா முடிவை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

"ஊழலுக்கு எதிராக போராடுவதற்காக ஆம் ஆத்மி கட்சி பிறந்தது, ஆனால் இன்று அந்த கட்சியே ஊழலில் சிக்கியுள்ளது. இதனால் அமைச்சர் பதவியில் இருப்பது எனக்கு கஷ்டமாக இருந்தது. அதனால் நான் ராஜினாமா செய்துவிட்டேன். அமைச்சர் பதவியிலும், கட்சியிலும் இருந்து கொண்டு என்னால் இந்த ஊழலுக்கு ஒத்துழைக்க முடியாது." என்று ராஜ் குமார் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பியுள்ளதாகவும் ராஜ்குமார் ஆனந்த் கூறியுள்ளார்.

மன்மோகன் சிங் எடுத்த முடிவுகளை மாற்றிய சோனியா காந்தி! யூ.பி.ஏ. ஆட்சி குறித்து ஆர்.கே. சிங் குற்றச்சாட்டு!

அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருந்து தனது கட்சியினருக்கு, பி.ஆர். அம்பேத்கரின் பிறந்தநாள் தொடர்பாக அனுப்பிய கடிதத்தை கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து ராஜ்குமாரின் ராஜினாமா முடிவு வந்துள்ளது. 

பணமோசடி தொடர்பான வழக்கில் ராஜ்குமார் ஆனந்த் வீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் 3ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தியது நினைவூட்டத்தக்கது.

இதற்கிடையில், செவ்வாய்க்கிழமை மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீன் கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றத்தின் தள்ளுபடி செய்துள்ளது. அமலாக்கத்துறை கெஜ்ரிவாலை கைது செய்திருப்பது சட்டவிரோதமானது அல்ல என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தமிழக ஊரக வளர்ச்சித் துறையில் சி.இ.ஓ வேலைவாய்ப்பு! உடனே விண்ணப்பிங்க...