Asianet News TamilAsianet News Tamil

தினமும் 6000 லிட்டர்... கொரோனாவை குறிவைத்து படுஜோராக நடைபெறும் கோமிய விற்பனை..!

தீங்கிழைக்கும் கொரோனா நுண்ணுயிர்களை அழிக்க கோமியம் பயன்படுவதாகவும் அந்த அமைப்பு பெருமிதத்தோடு கூறிவருகிறது. 

can cow urine prevent or cure coronavirus
Author
Gujarat, First Published Apr 10, 2020, 4:59 PM IST

கொரோனா வைரஸ் நோய்த்தொற்றில் இருந்து தப்பிக்க பசு மாட்டின் கோமியம் மிகச்சிறந்த கிருமிநாசினி என்ற நம்பிக்கை தற்போது மக்களிடையே அதிகரித்து வருகின்றது.

ஏற்கனவே, பசு மாட்டின் கோமியத்தில் நோய்க்கிருமிகளின் தாக்கத்தை கொல்லும் சக்தி மிக அதிகமாக இருப்பதாக விஞ்ஞானப்பூர்வமாகவும் மருத்துவரீதியாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பசுவின் கோமியம் மற்றும் சானத்தின் மூலம் தீர்வு காண முடியும் என அசாம் சட்டசபையில் சுமன் ஹர்ப்ரியா என்ற எம்.எல்.ஏ. சுட்டிக் காட்டி இருந்தார்.can cow urine prevent or cure coronavirus

உத்தர பிரதேசம் மாநிலத்தில் வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் பசு மாட்டின் கோமியம் மற்றும் சானத்தை பதப்படுத்தி விற்பனை செய்யும் திட்டம் தொடங்கப்படவுள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் சமீபத்தில் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டின் தலைநகர் டெல்லியில் அகில பாரத இந்து மகாசபா இயக்கத்தின் சார்பில் பசுவின் கோமியத்தை பருகும் நிகழ்ச்சி ஒன்றும் நடத்தபட்டது. இந்நிலையில், தினமும் 6 ஆயிரம் லிட்டர் கோமியத்தை குஜராத்திகள் குடித்து வருவதாக கூறப்படுகிறது.  நோய் எதிர்ப்பு சக்திகள் அதிகரிக்கும் என கூறி விற்பனை செய்து வருகின்றனர்.can cow urine prevent or cure coronavirus

இந்தியா முழுக்க கொரோனா  வைரஸ் பற்றி வேகமாக பரவி வரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் கோமியம், சாணி, வறட்டி, பாட்டிலில் அடைக்கப்பட்ட கோமிய விற்பனை படு ஜோராக நடந்து வருவதாக ராஷ்டிரிய காமதேனு அயோக்கிய என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க குஜராத்தில் தினமும் 6000 லிட்டர் கோமியத்தை பொதுமக்கள் குடிப்பதாகவும் தீங்கிழைக்கும் கொரோனா நுண்ணுயிர்களை அழிக்க கோமியம் பயன்படுவதாகவும் அந்த அமைப்பு பெருமிதத்தோடு கூறிவருகிறது. கோமியம் நோய் எதிர்ப்பு சக்தியை தடுத்து நிறுத்தாது என்றும் எந்தவித பலனையும் தராது என்றும் மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இருப்பினும் கோமியம் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios