Asianet News TamilAsianet News Tamil

‘மனிதர்கள் உண்ண தகுதியற்றவை’ இந்திய ரெயில்வே உணவுகள் குறித்து சி.ஏ.ஜி. பகீர் தகவல்!

cag statement about railway food
cag statement about railway food
Author
First Published Jul 22, 2017, 8:24 AM IST


இந்திய ரெயில்வேயில் நாள்தோறும் 2.2 கோடி பயணிகள் பயணிக்கும் நிலையில், அதில் வழங்கப்படும் உணவுகள் மனிதர்கள் உண்ணத் தகுதியற்றவை என்று மத்திய தலைமைத் தணிக்கைக் குழு(சி.ஏ.ஜி.)அதிர்ச்சித் தகவல் வௌியிட்டுள்ளது.

 74 ரெயில் நிலையங்கள், 80 ரெயில்களில் இந்த ஆய்வு மேற்கொண்ட சி.ஏ.ஜி. அமைப்பு இந்த அறிக்கையை வௌியிட்டுள்ளது.

மேலும், ரெயில்வே கேட்ரிங் சர்வீஸின் மோசமான நிர்வாகத்தை சுட்டிக்காட்டி உள்ள சிஏஜி, தரமற்ற உணவு, தரத்தில் சமரசம் ஆகியவற்றுக்கு வழிவகை செய்து உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ரெயில்வேயின்  உணவுகள் சுகாதாரம் மற்றும் தரம் குறித்து சராசரி மற்றும் மோசமானது என்று 75 சதவித பயணிகள் உணர்கிறார்கள். 

 சிஏஜி குழு ஆய்வு செய்ததில் ரெயில் நிலையங்களில் வழங்கப்படும் பழரசம்,பிஸ்கட்ஸ் மற்றும் பல்வேறு பால் குளிர்பானங்கள் மனிதர்கள் சாப்பிடுவதற்கு தகுதியற்றது என தெரியவந்து உள்ளது.

 அசுத்தமான உணவு பொருட்கள், மறுசுழற்சி உணவுப் பொருட்கள், காலாவதியானபேக்கேஜ் உணவுப்பொருட்கள் மற்றும் பாட்டில்கள், அங்கீகாரம்பெறாத குடிநீர் பாட்டில்கள் விற்பனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு உள்ளது.

இவைகளை ரெயில் நிலையங்கள் மற்றும் ரெயில்களில் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது என சிஏஜி தெரிவித்து உள்ளது.

 11 ரெயில்வே மண்டலங்களில் 21 ரெயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கிடையாது. காபி, டீ மற்றும் சூப் போன்றவை தயாரிப்புக்கு சுத்திகரிக்கப்படாத தண்ணீர் 22 ரெயில்களில் பயன்படுத்தப்படுகிறது.

உணவுப்பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டது கிடையாது. பொதுவான ரெயில்வே தண்ணீரே சில ரெயில்களில் உணவுப்பொருட்கள் தயாரிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது. 13 ரெயில்வே மண்டலங்களில் 32 ரெயில் நிலையங்களில் சமையல் அறையில் கை உறை மற்றும் தலை கவசம் அணிவது கிடையாது.

 ஆய்வின் போது உணவுப்பொருட்கள் மோசமாக உள்ளது, பூச்சிக்கள் பறந்ததும் காணப்பட்டு உள்ளது. மூன்று ரெயில் நிலையங்களில்  பூச்சிகளிடம் இருந்து உணவை பாதுகாக்க மூடி வைக்கப்படுவது கிடையாது, தூசி காணப்படுகிறது.

 கான்பூர்-டெல்லி எக்ஸ்பிரஸ் உட்பட ரெயில்களில் சமையல் அறையில் விற்பனை ஆகாத பரோட்டாக்கள் மறுசுழற்ச்சி செய்யப்படுகிறது.

புகார்களை சரிசெய்யும் அமைப்பானது செயல் இழந்து காணப்படுகிறது.  அதிகமான புகார்கள் கேட்ரிங் சர்வீஸ் குறித்தே வருகிறது.  உணவுப்பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை மற்றும் தரமற்ற உணவுகள் குறித்தே அதிகமான  புகார்கள் வருகின்றன

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios