சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைவில் சென்றடைவர் என துணை பிரிவு மாஜிஸ்திரேட் தன்பிர் தாகூர் தெரிவித்தார்.

இமாச்சல பிரதேச மாநிலத்தின் பர்வானூ பகுதியில் செயல்பட்டு வந்த கேபில் கார் நடு வழியில் நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கேபில் காரில் சிக்கி இருந்த பதினொரு சுற்றுலா பயணிகளில் இதுவரை ஏழு பேர் பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளனர். இன்று மதியம் கேபில் கார் நடுவழியில் நிறுத்தப்பட்டதை அடுத்து மீட்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகிறது.

கேபில் காரில் சிக்கி இருக்கும் சுற்றுலா பயணிகளை மீட்கும் பணிகளில் மீட்பு டிராலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. மீட்கப்படும் சுற்றுலா பயணிகள் கௌசல்யா ஆறு அமைந்துள்ள மலைப்பகுதிகளில் இறக்கப்பட்டு வருகின்றனர். “டிம்பர் டெயில் ஆபரேட்டர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், போலீஸ் அதிகாரிகள் அங்குள்ள கள சூழலை கண்காணித்து வருகின்றனர்,” என சோலன் மாவட்ட காவல் துறை எஸ்.ஐ. தெரிவித்து இருக்கிறார்.

விரைவில் தேசிய பேரிடர் மீட்பு படை:

சம்பவ இடத்தில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைவில் சென்றடைவர் என துணை பிரிவு மாஜிஸ்திரேட் தன்பிர் தாகூர் தெரிவித்தார். டிம்பர் டிரெயில் தனியார் தங்கும் விடுதியின் மிகவும் பிரபலமான அம்சம் கேபில் கார் ஆகும். இந்த தங்கும் விடுதி சண்டிகரில் இருந்து கசௌலி மற்றும் சிம்லா செல்லும் வழிதடத்தில் சுமார் 35 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்து உள்ளது. 

இந்த பகுதி இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் சண்டிகர் போன்ற மாநிலங்கள் ஒன்று கூடும் பகுதியில் அமைந்து இருக்கிறது. முன்னதாக இதே பகுதியில் கேபில் கார் விபத்து ஏற்பட்டது. அக்போடர் 1992 ஆண்டு நடைபெற்ற விபத்தின் போது பத்து பேரை ராணுவம் மற்றும் விமான படை சேர்ந்து பத்திரமாக மீட்டனர். எனினும், ஒருவர் உயிரிழந்து விட்டார். 

அப்போது விபத்தில் சிக்கி இருந்தவர்களில் பாதி பேர் மீட்கப்படும் போதே இருட்டி விட்டது. போதிய வெளிச்சமின்மை காரணமாக மீட்பு பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதன்பின் மறு நாள் காலையில், தான் மீண்டும் மீட்பு பணிகள் துவங்கின. கேபில் கார் கட்டுப்பாட்டை இழந்த போது, அதன் ஆபரேட்டர் அதில் இருந்து குதித்து மலையில் மோதி உயிரிழந்தார்.