Asianet News TamilAsianet News Tamil

அரசு பங்களாவில் ‘ஒசியில மங்களம்’ பாட முடியாது… எம்.பி. எம்.எல்.ஏ.க்களை ‘கிளப்ப சட்டம்ரெடி’...

Cabinet changes law to stop overstay of MPs bureaucrats at government bungalows
Cabinet changes law to stop overstay of MPs, bureaucrats at government bungalows
Author
First Published May 18, 2017, 8:04 AM IST


எம்.பி. எம்.எல்.ஏ.க்கள், அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள், தங்களின் பதவிக் காலம் முடிந்தபின்னும், அரசு சொகுசு பங்களாக்களில் நீண்ட காலம் தங்கியிருந்தால், அவர்களை விரைவாக காலி செய்ய கொண்டுவரப்பட்ட சட்டதிருத்தத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. 

பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அதில் அரசு கட்டிடங்கள் அதிகாரமில்லாதவர்கள் தங்கி இருப்பவர்களைவௌியேற்றும் சட்டத்தில் செய்யப்பட்ட சட்டத் திருத்தத்துக்கு நேற்று ஒப்புதல் பெறப்பட்டது. 

இது குறித்து மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், “ அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர்பதவியில் இருக்கும் அதிகாரிகள், தங்களின் பதவிக்காலம் முடிந்தபின்னும் அரசு வீடுகளில் தங்கி இருக்கிறார்கள். இதைத் தவிர்க்கும் வகையில், அவர்களை விரைவாக காலி செய்ய வைக்கும் வைக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதன்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குப் பின்பும், அரசு வீடுகளில் அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் தங்கி இருந்தால், அவர்களிடம் இருந்து அபராதம் விதிக்கப்படும்.

பதவிக்காலம் முடிந்த பின்பும் காலி செய்யாமல் இருக்கும் எம்.பி.க்கள், அதிகாரிகளால், அடுத்துவரும் நபர்களுக்கு வீடுகளை ஒதுக்கமுடியாத சூழல் ஏற்படுகிறது.அதைத் தவிர்க்கவே இந்த சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதிய சட்டத்திருத்தத்தின்படி குறிப்பிட்ட அதிகாரி, அவருக்கு இருக்கும் அதிகாரத்தை பயன்படுத்தி, வீட்டை காலி செய்யக்கூறி உத்தரவிடலாம். அவ்வாறு  இவர்கள் காலி செய்யாத பட்சத்தில் குறிப்பிட்ட அதிகாரி தனது பதவியைப் பயன்படுத்தி அவர்களை காலி செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது’’ எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios