தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் பசுமை எரிசக்தி திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். 

தமிழகம் உள்ளிட்ட 7 மாநிலங்களில் பசுமை எரிசக்தி திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாகவும் அதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். 2015 இல் பாரிஸ் உடன்படிக்கையின் கீழ், 2022 ஆம் ஆண்டிற்குள் 175 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க திறன் மற்றும் 2030 இல் 450 ஜிகாவாட் என, இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. அக்டோபர் 2021க்குள், இந்தியா ஏற்கனவே 100 ஜிகாவாட் திறனைத் தாண்டியுள்ளது என்று புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 2021க்குள், இந்தியாவின் நிறுவப்பட்ட மின் திறனில் 39% புதைபடிவமற்ற மூலங்களில் இருந்து வந்தது, 2022 ஆம் ஆண்டுக்குள் 40% இலக்காக இருந்தது.

2030 ஆம் ஆண்டுக்குள் 450 ஜிகாவாட் என்ற முந்தைய இலக்கில் இருந்து 500 ஜிகாவாட் ஆக உயர்த்தியது. இந்த நிலையில் தமிழகத்தில் பசுமை எரிசக்தி 2ம் கட்ட திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலங்களில் இந்தியாவில் உள்ள 7 மாநிலங்களில் பசுமை எரிசக்தி 2 ஆம் கட்ட திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்திருக்கிறது. இதுகுறித்து அறிவித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், தமிழகம், குஜராத், ஹிமாச்சல் பிரதேசம், கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், உத்திரபிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பசுமை எரிசக்தி திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக தெரிவித்தார்.

இந்த பசுமை எரிசக்தி 2 ஆம் கட்ட திட்டத்தின் கீழ் 20 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி செய்யப்படும் எனவும், இதற்காக ரூ.12,031 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த இரண்டாம் கட்ட பசுமை எரிசக்தி திட்டம் 2021 - 22 முதல் 2025-26 ஆண்டுகளுக்குள் செயல்படுத்தப்படுமென்று தெரிவித்தார். 2030 ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகா வாட் புதுப்பிக்கத்தக்க எர்சக்தி உற்பத்தி செய்யப்படும் என்றார். மேலும் ஏற்கனவே ரூ.10,142 கோடி செலவில் தொடங்கப்பட்ட முதல் கட்ட பசுமை எரிசக்தி திட்டப்பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டதாக தெரிவித்தார்.