Asianet News TamilAsianet News Tamil

நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை... மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

நாடு முழுவதும் இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும், இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை விளம்பரம் உள்ளிட்ட அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Cabinet approves ban on e-cigarettes
Author
Delhi, First Published Sep 18, 2019, 4:04 PM IST

நாடு முழுவதும் இ-சிகரெட் எனப்படும் எலக்ட்ரானிக் சிகரெட்டுகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. மேலும், இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை விளம்பரம் உள்ளிட்ட அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Cabinet approves ban on e-cigarettes

புகையிலை சிகரெட்டுகளுக்கு மாற்றாக சில நாடுகளில் ‘இ-சிகரெட்’ என்று கூறப்படும் மின்னணு சிகரெட்கள் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் உடல்நலத்துக்கு கேடு என்பதால் இதனை தடை செய்வதற்காக மத்திய சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வந்தது. ஏற்கனவே தமிழக அரசு 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம்  இ-சிகரெட்டுக்கு தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்தது. 

இந்நிலையில், இ-சிகரெட் மூலம் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அதனால் கேன்சர் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் இ-சிகரெட்டுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

Cabinet approves ban on e-cigarettes

மேலும், இ-சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, இறக்குமதி, விற்பனை விளம்பரம் உள்ளிட்ட அனைத்துக்கும் தடை விதிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios