by poll results: இடைத் தேர்தல் முடிவு: மே.வங்கத்தில் திரிணமூல், பிஹாரில் ஆர்ஜேடி, மகாராஷ்டிராவில் காங் வெற்றி
by poll results :மேற்கு வங்கத்தில் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இடைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கி்ரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் நடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இடைத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கி்ரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
பிஹாரில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி வென்றுள்ளது, மகாராஷ்டிராவில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி முன்னிலையி்ல் இருக்கிறது.
மேற்கு வங்கத்தில் ஒரு மக்களவைத் தொகுதிக்கும், ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும், சத்தீஸ்கர், பிஹார், மகாராஷ்டிராவில் தலா ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடந்து முடிந்து வாக்குகள் இன்று எண்ணப்பட்டன.
சத்ருகன் சின்ஹா வாகை
இதில் மேற்கு வங்கத்தின் அசன்சோல் மக்களவைத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா போட்டியிட்டார், அவரை எதிர்த்து பாஜக சார்பில் அக்னிமித்ரா பால் களமிறங்கினார். இதில் சத்ருகன் சின்ஹா ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அக்னிமித்ராவை வென்றுள்ளார்.
பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தேர்தலில் பாபுல் சுப்ரியா களமிறக்கப்பட்டார். பாஜகவில் எம்.பியாக இருந்த பாபுல் சுப்ரியா அந்தக் கட்சியிலிருந்துவிலகி திரிணமூல் காங்கிரஸில் சேர்ந்தார். இந்த தொகுதியில் பாபுல் சுப்ரியாவை எதிர்த்து பாஜக சார்பில் கேயா கோஷ் போட்டியி்ட்டார். இதில் பாபுல் சுப்ரியா 50,996 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக சார்பில் கேயா கோஷ் 13,174 வாக்குகளுடன் 4-வது இடத்துககு தள்ளப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2-வது இடத்தையும், காங்கிரஸ் 3வது இடத்தையும் பிடித்தன.
மம்தா நன்றி
மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில் “ அசன்சோல் மக்களவைத் தொகுதி, பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளர்களுக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து வெற்றி பெறவைத்தமைக்கு நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.
பிஹாரில் ஆர்ஜேடி
பிஹாரில் போச்சாஹன் சட்டப்பேரவைத் தொகுதியி் ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பில் அமர் குமார் பாஸ்வானும் அவரை எதிர்த்து பாஜக சார்பில் பேபி குமாரியும் போட்டியிட்டனர். இதில் 36ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஆர்ஜேடி வேட்பாளர் அமர் குமார் பாஸ்வான் வெற்றி பெற்றுள்ளார்.
சத்தீஸ்கரில் காங. முன்னிலை
சத்தீஸ்கர் மாநிலத்தில் காயிராகார்க் சட்டப்பேரைவத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் யசோதா நிலம்வர் வர்மாவை எதிர்த்து பாஜக சார்பில் கோமல் ஜங்கல் போட்டியிட்டார். இதில், நிலம்வர் வர்மா 20 வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார்.
காங். வெற்றி
மகாராஷ்டிராவில் வடக்கு கோல்ஹாபூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது. இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் ஜாதவ் ஜெயஸ்ரீ சந்திரகாந்த்தை எதிர்த்து பாஜகவின் சத்யஜீத் கதம் போட்டியி்ட்டார். இதில் சந்திரகாந்த் இதுவரை 71 ஆயிரம் வாக்குகளுடன் முன்னணியில் உள்ளார், கதாம், 57ஆயிரம் வாக்குகளுடன் பின்தங்கியநிலையில் 18ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் சந்திரகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.