அசாமில் குட்டையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து பார்பேட்டா நகரை நோக்கி இன்று சென்று கொண்டிருந்தது. 

நேற்று மாலை நல்பாரி மாவட்டத்தின் வழியாக சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோரத்தில் உள்ள குட்டைக்குள் பாய்ந்தது. இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் சிலரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.