புர்கா, இளவயது திருமணங்களால் முஸ்லிம்களிடையே, அதிகரித்து வரும் கல்வி இடைநிற்றல்!
முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் கூட உயர்கல்வி பெறும் வாய்ப்பு குறைவாக உள்ளது. இவை ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்தை அழிக்கிறது.
இந்தியாவில் பெரும்பாலான கிராம்பபுறங்களில் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருப்பது வாடிக்கையானது தான். அதே நேரம், இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சிறுவர்கள் கூட உயர்கல்வி பெறும் வாய்ப்பு குறைவாக உள்ளது. இவை ஒட்டுமொத்த முஸ்லீம் சமூகத்தின் கல்வி முன்னேற்றத்தை அழிக்கிறது.
இதுதொடர்பாக ஒரு அறிக்கையும் வெளியாகியுள்ளது. அந்த அறிக்கையை, இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆப்ஜெக்டிவ் ஸ்டடீஸ் உடன் ஒப்பிட்டுப் பார்க்கையில், முஸ்லீம் சமூகம் கைவிடப்பட்ட நிலையை உணர்த்துகிறது. இந்த ஆய்வை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியை ரூபினா தபஸ்ஸும் மேற்கொண்டார்.
இந்த ஆய்வில் முஸ்லீம்களின் இடைநிற்றல் விகிதம் குறித்த அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. முஸ்லீம்கள் மத்தியில் பள்ளி சேர்க்கை விகிதம் குறைந்து வருவதோடு, இடைநிற்றல் விகிதத்தில் மேலும் அதிகரித்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் 27 சதவீத முஸ்லிம்கள் உள்ள நிலையில், இடைநிற்றல் விகிதம் 27.2 சதவீதமாக உள்ளது. இதற்கு எதிராக, இந்துக்களின் இடைநிற்றல் 22 சதவீதமாக உள்ளது. பீகாரில் முஸ்லீம்களின் இடைநிற்றல் விகிதம் 13.9 சதவீதமாக உள்ளது.
அறிக்கையின்படி, முஸ்லிம்களின் வருமானம் அதிகரித்துள்ள நிலையில், அவர்களால் கல்வியில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், துரதிர்ஷ்டவசமாக, மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் மறைவுக்குப் பிறகு, எந்த முஸ்லீம் தலைவரும் கல்வியில் கவனம் செலுத்தவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பேராசிரியர் ரூபினா தபஸ்ஸும் தலித் மற்றும் ஆதிவாசி சமூகங்கள் பற்றிய அறிக்கைகளையும், முஸ்லீம் சமூகத்தின் கல்வி நிலை குறித்தும் சமர்பித்துள்ளார்.
ரூபினா தபஸ்ஸும் அறிக்கையின் படி, தேசிய சராசரியான 18.96 சதவீதத்துடன் ஒப்பிடும்போது, முஸ்லிம்களின் இடைநிற்றல் விகிதம் 23.1 சதவீதமாக உள்ளது.
வங்காளம், லட்சத்தீவு, அசாம் போன்ற மாநிலங்களில் இடைநிற்றல் சதவீதம் அதிகமாக இருப்பதாக ரூபினா கூறுகிறார். முஸ்லீம்கள், முறையான கல்வியில் நாட்டம் குறைவாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். "மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதை கொடுக்க வேண்டிய விதத்தில் கொடுக்கவில்லை." என்று வேதனை தெரிவித்துள்ளார்.
கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை (6-14 வயதுக்குட்பட்டவர்கள்) பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அவர் கூறுகிறார். இருப்பினும், முஸ்லிம்கள் பெரும்பாலும் குழந்தைகளை 15 வயதிலேயே கல்வியை கைவிடச் செய்து அவர்களை வேலைக்கு அனுப்புகிறார்கள்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு காஷ்மீரிலும் நிலைவை இதைவிட மோசம் தான். ஜம்மு காஷ்மீரில் இடைநிற்றல் விகிதம் (சதவீதம்) இந்து 0%, முஸ்லிம் 0.7%; (முதன்மை வகுப்பினர்) இந்து 6.5%, முஸ்லிம் 5.5%; (நடுத்தர மற்றும் அதற்கு மேல் வகுப்பினர்) இந்து 6% முஸ்லிம் 12.8%; (இரண்டாம் வகுப்பினர்) இந்து 17.3%, முஸ்லிம்கள் 25.8%.
மேலும் உயர்நிலை வகுப்பில், இந்துக்கள் இடைநிற்றல் விகிதம் 15% ஆகவும், முஸ்லீம்கள் 15.4% (சதவீதம்) ஆகவும் உள்ளனர்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, அசாமில் முஸ்லிம்கள் 34.22 சதவீதமாக உள்ளனர். இங்கும் முஸ்லிம்களின் இடைநிற்றல் விகிதம் கவலையளிக்கிறது என்கிறார் ருபீனா,
முன் மற்றும் ஆரம்ப வகுப்பில்
இந்து 6%, முஸ்லீம் 5.9% மற்றும் கிறிஸ்தவர்கள் 28.8%,
நடுத்தர மற்றும் மேல் வகுப்பில்
இந்து 15.0%, முஸ்லீம் 12.5% மற்றும் கிரிஸ்தவர் 26.4%,
இரண்டாம் வகுப்பில்
இந்து 28.0%, முஸ்லிம் 26.0% மற்றும் கிறிஸ்தவர்கள் 30.0%,
உயர்நிலை வகுப்பில்,
இந்து 25.8%, முஸ்லீம் 30.2%, கிறிஸ்தவர் 32.0%
முதுகலை பட்டப்படிப்பில்
இந்துக்கள் 13.9%, முஸ்லிம்கள் 19.6% மற்றும் கிறிஸ்தவர்கள் 19.2%. இதேபோல், இந்துக்கள் 11.5%, முஸ்லிம்கள் 9.6%, கிறிஸ்தவர்கள் 0.0%.
முஸ்லிம்கள் 27 சதவீதமாக இருக்கும் மேற்கு வங்கத்தில், முஸ்லீம்களின் இடைநிற்றல் சதவீதம் 27.2 ஆகவும், இந்துக்கள் 22.0 ஆகவும் உள்ளனர் என்கிறார். ஜார்கண்ட், கர்நாடகா, குஜராத், கேரளா, தெலுங்கானா, டெல்லி ஆகிய மாநிலங்களில் உள்ள பள்ளிகளில் முஸ்லீம்கள் இடைநிற்றல் விகிதம் அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கிறார். முஸ்லீம்களிடையே உள்ள இந்த இடைநிற்றலுக்கு, நிதிக் கட்டுப்பாடுகள் காரணம் என்றும் ருபீனா கூறுகிறார்.
ஆய்வின்படி, 23.0 சதவீத முஸ்லீம் குழந்தைகளும், 18.7 சதவீத இந்துக்களும், அவர்களது குடும்ப வருமானம் ரூ.1231-1700 இருப்பதகாவும், அதனாலேயே, அவர்கள் பள்ளியை இடைநிறுத்துகிறார்கள் என்கிறார். அதிக வருமானம் உள்ள பிரிவில் இந்த போக்கு சற்று குறைவாக உள்ளது.
மேலும், திருமணம் மற்றும், இளமைக்காலத் திருமணம் ஆகியவற்றால் முஸ்லீம் பெண்களிடையே அதிக இடைநிற்றலுக்கு காரணமாக உள்ளன. ருபினா தபஸ்ஸூமின் கூற்றுப்படி, நரேந்திர மோடி அரசாங்கம் மௌலானா ஆசாத் கல்வி உதவித்தொகையை திரும்பப் பெற்று, கர்நாடகாவில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குள் பெண்கள் பர்தா, நிகாப் போன்றவற்றை அணிவதைத் தடைசெய்தால், பெண்களின் இடைநிற்றல் அதிகரிக்க வாய்ப்புள்ளன என்றும் தெரிவிக்கிறார்.
அசாமில் மதரஸாக்கள் மூடப்பட்டதால், படிப்பை இடைநிறுத்துவது அங்கு மிக அதிகமாக இருந்து வருகிறது. முஸ்லிம்கள் மத்தியில் உள்ள தலைமைத்துவமின்மையே பாடசாலைகளில் இடைநிற்றலுக்கு முக்கிய காரணமாகக் கருதுகிறார் ருபீனா தபஸ்ஸூம்.
இந்தியாவில் முஸ்லீம் தலைமை பலவீனமாக இருப்பதாகவும், கல்வி பற்றி பேசுபவர்கள் மிகக் குறைவு என்றும் அவர் கூறுகிறார். “மௌலானா அபுல் கலாம் ஆசாத்துக்குப் பிறகு, முஸ்லிம்களுக்கு சரியான பாதையைக் காட்டக்கூடிய மற்றும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை கல்வியுடன் இணைக்கக்கூடிய எந்த தலைவரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. கொள்கை வகுப்பதில் பங்கு வகிக்கக்கூடிய முஸ்லிம் தலைவர்கள் யாரும் இல்லை,” என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்களில் 14.23 சதவீதம் பேர் மிகவும் ஏழ்மையானவர்கள். முஸ்லிம்கள் மற்ற சமூகங்களைப் போலவே சம்பாதிக்கிறார்கள், ஆனால் தங்கள் குழந்தைகளின் கல்விக்கு குறைவாகவே செலவிடுகிறார்கள். இடைநிற்றல் எங்கு நடக்கிறது, ஆரம்ப மற்றும் நடுத்தர வகுப்பினரில் அதை எவ்வாறு தடுப்பது என்பதை நாம் யோசிக்க வேண்டும் என்கிறார்.
மறுபுறம் ரூபினா தபஸ்ஸும், கிறிஸ்தவ சமூகத்திடம், நாட்டில் அவர்களின் மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ளது, ஆனால் அவர்களின் முழு கவனமும் கல்வியில் உள்ளது என்று கூறுகிறார். அதனால்தான் இந்தச் சமூகத்தில் அதிகம் படித்த குழந்தைகள் இருப்பதாகவும், முஸ்லிம்களும் கல்வியில் கவனம் செலுத்த முன்வரவேண்டும் என்றும் ரூபினா அழைக்கிறார்.
மேலும் சில முக்கிய கேள்விகளுக்கு ரூபினா பதிலளித்துள்ளார்...
தடைகள் எங்கிருந்து வருகின்றன?
மற்ற சமூக பெண்களுடன் ஒப்பிடுகையில் முஸ்லிம் பெண்கள் மிகவும் பலவீனமானவர்கள். பெண்கள் அதிகம் படித்தால் இளவயது திருமணம் நடக்காது. சமூகத்தில் சிறுவர்கள் அவ்வளவாகப் படித்தவர்கள் இல்லை. இரண்டாவதாக, திருமண வயதை நினைத்து பெற்றோர்கள் கவலைப்படுவதால், பெண்கள் கல்வி கற்கவும் வேலைக்காகவும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை என்கிறார் ரூபினா
முஸ்லிம் நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும்?
முஸ்லீம் குழந்தைகளின் இடைநிற்றலை தடுக்க, முஸ்லிம் நிறுவனங்கள் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சுதந்திரத்திற்கு முன் கல்வியில் SC மற்றும் ST முஸ்லிம்களை விட மிகவும் கீழே இருந்தனர். ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த சமூகங்களுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது, இன்று முஸ்லிம்கள் அவர்களை விட மிகவும் பின்தங்கியுள்ளனர்.
இதற்காகச் செயல்படும் முஸ்லிம் அமைப்புகள் பல்வேறு இடங்களில் மக்களுக்கு கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதன் பலன்களை எடுத்து கூற வேண்டும். பெண்கள் வெளியில் சென்று படித்து சம்பாதித்தால் தவறில்லை என்பதை சமூகம் கொஞ்சம் பெரிய மனதுடன் ஏற்ளுக்கொள்ள வேண்டும். எங்கெல்லாம் மதரஸாக்கள் இருக்கிறதோ, அங்கெல்லாம் நவீன கல்வியும் புகுத்தப்பட வேண்டும். உ.பி.யில் இடைநிற்றல் குறைவு, அதற்குக் காரணம் மதரஸாக்கள், அங்கு பெண் குழந்தைகளுக்கும் கல்வி வழங்கப்படுகிறது என்றும் ரூபினா கூறியுள்ளார்.